சனி, 7 பிப்ரவரி, 2026

மனிதாபிமானமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணியும்!

 மனிதாபிமானமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணியும்!

சொந்த ஊரில் இறந்த சகோதரரின் ஜனாஷாவை அடக்க மறுத்த சித்தார் கோட்டை சுன்னத் வல் ஜமாதாரும் புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளியை சொந்த மையவாடியில் அடக்க இடம் கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டணம் கிளை நிர்வாகமும்
தங்கள் ஜமாத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் இல்லத்தில் மரணம் ஏற்படும் போது கூட, பல்வேறு நிபந்தனைகளை விதித்து நல்லடக்கத்திற்கு அனுமதி மறுக்கும் ஜமாத்துகளுக்கு மத்தியில்; பிழைப்பிற்காக பீகார் மாநிலம் விட்டு தமிழ்நாட்டிற்கு வந்து, யாரென்றே தெரியாத நிலையில் மரணித்த ஒரு ஏழை மூமினுக்காக, இஸ்லாமிய சகோதரத்துவத்தோடு களம் இறங்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். இராமநாதபுரம் (தெற்கு மாவட்டம்) வெளிப்பட்டிணம் கிளை
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது ஜமில் அவர்களின் புதல்வர் முஹம்மது அலி சேர் அவர்கள் நேற்று (04/02/2026) காலை 6:25 மணியளவில் மரனமடைந்தார்கள்.
அன்னாரின் ஜனஸா இன்று 5/2/2026 மதியம் லுஹர் தொழுகைக்குப் பிறகு, சக்கரக்கோட்டையில் உள்ள TNTJ வெளிப்பட்டினம் கிளைக்கு சொந்தமான கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யாரென்றே தெரியாத ஒரு மூமின் இறந்துவிட்ட செய்தியைக் அவர்தன் குடும்பத்தினர் கிளை நிர்வாகத்திடம் கூறி அடக்கம் செய்ய உதவி கேட்டவுடன், எவ்வித தயக்கமுமின்றி மனிதநேய அடிப்படையில் உடனடியாக அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், நல்லடக்கம் முடியும் வரை அந்த குடும்பத்திற்கு உற்ற துணையாக TNTJ வெளிப்பட்டினம் கிளை மற்றும் சக்கரக் கோட்டை நிர்வாகிகள் களத்தில் நின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு உறுதுணையாக நின்ற ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, அவர்களின் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க துஆ செய்வோம்.
"நிச்சயமாக மூமின்கள் அனைவரும் சகோதரர்களே!"
— (அல்குர்ஆன் 49:10)
"யார் ஒரு மூமினின் உலகத் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறாரோ, அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்குகிறான்."
— (நபிமொழி: முஸ்லிம்)




source https://www.facebook.com/photo/?fbid=828495540209011&set=a.121595117565727