ஆளுநருக்கு எதிரான தமிழக அரசினுடைய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்று எழுப்பிய உச்ச நீதிமன்றம், இது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது, தமிழக அரசு அனுப்பியிருக்கும் மசோதாக்கள் குறித்து ஆளுநர் தமிழக அரசிடம் பேசி முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் மனு இன்று (பிப்ரவரி 4) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் - தமிழக அரசு இடையிலான மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு என்றும், மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அண்மையில், தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி உரையை நிகழ்த்தாமல் வெளியேறியது பெரும் சர்ச்சையானது.
இதைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காகவும், பரிசீலனைக்காகவும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, செயல்படாமல் இருப்பது, புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார் என்று தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவையில் நிறைவேற்றினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும். கடந்த 12-ம் தேதி ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2023-ம் ஆண்டு வரை தமிழக அரசு சார்பில் 12 மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் 2 மசோதாக்களை மட்டும் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். மற்ற 10 மசோதாக்களை திருப்பி அனுப்பிவிட்டார் என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினாரா? அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தனர். மேலும், பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு ஆளுநர் தடையாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர், மசோதாக்கள் தொடர்பாக முன்பே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. துணைவேந்தர் நியமன வழக்கில் எதிர்தரப்பில் யு.ஜி.சி சேர்க்கப்படாததால் மத்திய அரசால் பதில் தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-notice-to-centre-tamil-navu-government-governor-rn-ravi-8691172