நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து திருச்சி சிவா எம்.பி தெரிவித்ததாவது; மக்களுக்கான 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான எந்த அறிவிப்பும் ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை. சேவை, தொழில்துறை, விவசாயத்தில் பல இடங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் ஏழைகள் அதிகமாக உள்ளனர், வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-trichy-siva-says-no-job-opportunity-in-union-budget-8682437