புதன், 14 ஜனவரி, 2026

இன்ஜினியரிங் படிக்க ஆசையா? 2026-ல் இந்த கோர்ஸ்களுக்கு தான் டிமாண்ட் அதிகம்!

 

tamil nadu engineering admission

பொறியியல் படிக்க விரும்புபவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய, எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 12 ஆம் வகுப்பில் கணிதம் (50%), இயற்பியல் (25%), வேதியியல் (25%) பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்பிடையிலே நடைபெறும். 

புதுப்புது தொழில்நுட்பங்கள், உயர் சம்பள தொகுப்பு, அதிக வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் பொறியியல் படிப்பை பொறுத்தவரை சிறந்த கல்லூரியில் படிப்பது முக்கியம். அதேபோல் சிறந்த கோர்ஸ்களை தேர்வு செய்து படிப்பதும் முக்கியம்.

இந்தநிலையில், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 

தொழில் நிறுவனங்களின் தேவை அடிப்படையிலும், 2026 ஆம் ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து 2030 ஆம் ஆண்டில் படிப்பை முடித்து வெளியே வரும்போது எந்த துறையில் சிறந்த வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதன் அடிப்படையிலும் இந்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ எனப்படும் என செயற்கை நுண்ணறிவு அனைத்து துறையிலும் வருவதால் அதனை முதன்மை விருப்பமாக கொள்ள வேண்டியது அவசியமில்லை.

1). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்

2). எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

3). கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் 

4). மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

5). கெமிக்கல் இன்ஜினியரிங்

6). சிவில் இன்ஜினியரிங்

7). பெட்ரோலியம்/ பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங்

8). பயோடெக்னாலஜி, பயோடெக் & பயோகெமிக்கல், உணவு தொழில்நுட்பம்

9). பயோமெடிக்கல் இன்ஜினியரிங்/ மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

10). என்விரான்மெண்டல் இன்ஜினியரிங் (சுற்றுச்சூழல் பொறியியல்)

11). ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள்

12). ஏரோபேஸ் இன்ஜினியரிங்/ ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்/ டெக்ஸ்டைல் டெக்னாலஜி/ ஃபேஷன் டெக்னாலஜி


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2026-top-engineering-courses-for-future-employment-electronics-computer-science-10997806