- Sep 20, 2026 22:29 IST
மதுராந்தகம் த.வெ.க வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு - வந்த வழியிலேயே திருப்பி அனுப்பிய பொதுமக்கள்
மதுராந்தகம் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பரப்புரைக்கு சென்ற மதுராந்தகம் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனந்தமங்கலம், சிறுதாமூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பரப்புரைக்கு சென்ற அவரை பரப்புரைக்கு உள்ளே அனுமதிக்காமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த வழியிலேயே திருப்பி அனுப்பி உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-political-weather-district-news-live-updates-today-12553854





