திங்கள், 2 நவம்பர், 2026

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க

 source https://tamil.indianexpress.com/education-jobs/tnsrlm-recruitment-2026-karur-district-manager-accountant-jobs-apply-12774159


TNRD Recruitment 2025 Panchayat Secretary Job

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மேலாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 03.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: பொருளாதாரம்/ வணிகம்/ சந்தைப்படுத்தல் துறையில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

கணக்காளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: வடிவமைப்பு மென்பொருள் அறிவு உள்ள பட்டதாரியாக இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: மேலாளர், மாவட்ட மக்கள் கற்றல் மையம், மாயனூர் காவல் நிலையம் அருகில், மாயனூர் (அஞ்சல்), கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கரூர் மாவட்டம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.11.2026

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.