செவ்வாய், 3 நவம்பர், 2026

கரையை கடந்த முரசு புயல்; ஆனாலும் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு

 02 11 2026 


Murhd

வங்கக்கடலில் உருவான முரசு புயல், தெற்கு ஆந்திர கடற்கரையில் நெல்லூர் - நரசாபுரம் இடையே, ஓங்கோல் அருகே அதிகாலை 3.30 - 5.30 மணிக்குள் கரையை கடந்தது. கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசிய நிலையில், தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக வங்கக்கடலில் உருவான ஆர்னாப் புயல் ஆந்திர எல்லைப்பகுதியில் கரையை கடந்தது. ஆனாலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்தது. இதனால் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்கக்கடலில் மீண்டும் புயல் உருவானது. முரசு என்று பெயரிடப்பட்ட இந்த புயலும் ஆந்திர எல்லைப்பகுதியில் கரையை கடக்கும் என்றும், இதனால் வட தமிழக மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று (நவம்பர் 2) வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் இந்த புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் உருவான நிலையில், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில், வங்கக்கடலில் உருவான முரசு புயல், இன்று அதிகாலை 3.30 - 5.30 மணிக்குள் நெல்லூர் - நரசாபுரம் இடையே, ஓங்கோல் அருகே கரையை கடந்தது முரசு புயல். கரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதே சமயம் புயலின் வெளிப்புற சுழற்சியால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்திற்கான வடகிழக்கு பருவமழை இதுவரை 18 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், முரசு புயல் ஆந்திரப் பிரதேசத்தின் ஓங்கோலுக்கு அருகில் உள்ள கொத்தபட்டினத்திற்கு அருகே அதிகாலை 1 மணிக்குக் கரையை கடந்தது. இதன் காரணமாக மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் மிகக் கனமழையும் பெய்தது. இதனால் நெல்லூர், பிரகாசம் மற்றும் பாபட்லா ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.  மின் கம்பிகள் புயலைத் தாங்கி நின்றதால், மின் விநியோகம் பாதிக்கப்படவில்லை. தாழ்வான பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கின.

முரசு புயல் சூழ்நிலையைக் ஆய்வு செய்வதற்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை 03.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொலைபேசி வழி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். முரசு புயல் காலை 06.30 மணிக்குள் கரையைக் கடந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய 'அர்னாப்' புயலுக்குப் பிறகு, அறுந்து விழுந்த மின்சாரக் கம்பிகளைத் தொட்டதால் 5 பேர் உயிரிழந்தனர்.

அதுபோல் இல்லாமல், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்துத் தடைகளும் அகற்றி முடிக்கப்படும் வரை பொதுமக்கள் யாரும் சாலைகளுக்கு வரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். இதுவரை மின் கம்பங்கள் எதுவும் விழவில்லை என்றும், பாதிக்கப்பட்ட எந்தப் பகுதியிலும் மின் விநியோகத்தில் தடை ஏதும் ஏற்படவில்லை என்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/murasu-cyclone-effect-more-rain-in-tamilnadu-and-one-taluk-school-leave-update-12778020