திங்கள், 9 நவம்பர், 2026

ஆசிய நாடுகளின் டாப் ஹெல்த்கேர் ரேங்கிங்

 india

source https://tamil.indianexpress.com/international/global-healthcare-ranking-2026-india-malaysia-ipsos-12791744

உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான 'இப்சாஸ்'  32 நாடுகளில் நடத்திய 2026-ஆம் ஆண்டிற்கான சுகாதார பராமரிப்பு தரக் குறியீட்டு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த உலகளாவிய பட்டியலில் ஆசிய நாடுகள் முதல் 5 இடங்களையும் ஆக்கிரமித்து வரலாற்று சாதனை படைத்துள்ளன. இப்பட்டியலில் மலேசியா 72% புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தலா 68% புள்ளிகளைப் பெற்று இணைந்து 2-வது இடத்தை (தரவரிசையில் 3-வது இடம்) பிடித்து அசத்தியுள்ளன. 

2027 சர்வதேச சுகாதார பராமரிப்புத் தரக் குறியீடு

மலேசியா (முதலிடம் )72%

சிங்கப்பூர் (இரண்டாவது இடம்) 68%

இந்தியா (3-வது இடம் )68%

வியட்நாம் (4-வது இடம் )67%

ஆஸ்திரேலியா (5-வது இடம்) 64%

நெதர்லாந்து (6-வது இடம்) 63%

தாய்லாந்து (7-வது இடம்) 61%

தென்கொரியா (8-வது இடம்) 60%

ஸ்பெயின் (9-வது இடம்)60%

தென்னாப்பிரிக்கா (10-வது இடம்) 59%

இந்தியாவின் பிரம்மாண்ட செயல்பாடு

மருத்துவர்களை சந்திப்பதற்கான முன்பதிவைப் பெறுவதில் ஆய்வு செய்யப்பட்ட 32 உலக நாடுகளிலேயே இந்தியா 73% புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

சுகாதாரத் தரம் பற்றிய நேர்மறையான மதிப்பீடு: 68%

மருத்துவக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கை: 64%

மருத்துவர் அப்பாயின்மென்ட் பெறுவது சுலபம்: 73%

மருந்தகங்களை எளிதில் அணுகும் வசதி: 81%

சுகாதாரத் தரம் மேலும் உயரும் என்ற நம்பிக்கை: 54%

சிகிச்சைக் கட்டணம் இன்னும் சுமையகவே உள்ளது என்ற கருத்து: 74%

உலகளவில் நிலவும் முக்கிய மருத்துவ சவால்கள்

நீண்ட காத்திருப்பு நேரம் & சிகிச்சை தாமதம்: 47%

மருத்துவப் பணியாளர்கள் மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை: 43%

சிகிச்சைக்கான அதிகப்படியான செலவு: 32%

முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு: 23%

அரசு நடைமுறை சிக்கல்கள் : 22%

இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவத் தரம் மற்றும் வசதிகள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ள போதிலும், மருத்துவச் செலவு என்பது 42% மக்களுக்கு இன்னமும் பெரும் சவாலாகவே உள்ளது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆய்வு செய்யப்பட்ட முறை

2026 ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 7 வரை 'இப்சாஸ் குளோபல் அட்வைசர்' தளம் மூலம் 32 நாடுகளைச் சேர்ந்த 22,528 பெரியவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நோயாளிகளின் திருப்தி, மருத்துவ அமைப்பின் மீதான நம்பிக்கை, மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களை அணுகும் வசதி, மற்றும் சமமான சிகிச்சை வாய்ப்பு ஆகிய 5 முக்கிய காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டது.