வெள்ளி, 13 அக்டோபர், 2023

இஸ்ரேல் விதித்த தடை : காஸாவில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக ஐநா எச்சரிக்கை..!

 

காஸா மீது இஸ்ரேல் விதித்த குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தடையால்  மோசமான சூழ்நிலையில் காஸாவில் உள்ளதாக ஐநாவின் உலக உணவு பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், இஸ்ரேலுக்கு நுழைந்தும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதன்பின்னர் பதிலடியாக இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் இரண்டு நாடுகளிலும் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.  5000க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதன் பின்னர் இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதல் நடத்தில்  காஸா பகுதியில் மின்சாரம், தண்ணீர் மற்றும் எல்லை ஆகியவற்றை தடை செய்தது.  இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேபோல போர் பிரகடணம் அறிவித்துள்ள இஸ்ரேலுக்கும் கண்டனங்கள் வலுத்து வலுகிறது.

ரஷ்யா, ஈரான், சவூதி உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை  7வது நாளாக தொடா்ந்து வருகிறது.

ஹமாஸை எதிர்த்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து முற்றுகை மற்றும் வான்வழித் தாக்குதலை நிகழ்த்தி வருவதால் காஸா பகுதியில்  நிலைமை படுமோசமாகி உள்ளதாக  ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுப் பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பாலஸ்தீன பிராந்திய இயக்குநர் சமீர் அப்துல் ஜாபர்  தெரிவித்ததாவது..

காஸா பகுதியில் முழு முற்றுகையை இஸ்ரேல் அமல்படுத்தியதில் இருந்து, அங்கு அத்தியாவசிய பொருள்களின் கையிருப்பு எப்போது இல்லாத அளவுக்கு குறைந்து வருகிறது. மேலும் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரத்துக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.

ஐ.நா.வி பாதுகாப்பு முகாம்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் , பெண்கள் உட்பட காசா மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். அனைவருக்கும் இடமளிக்கும் அளவுக்கு எங்களிடம் போதிய வசதிகள் இல்லை.  வெள்ளிக்கிழமையிலிருந்து உணவுப் பொருள் விநியோகத்தை உணவு ஆலைகள் நிறுத்திவிடும் அபாயம் உள்ளது” என சமீர் அப்துல் ஜாபர் தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/ban-imposed-by-israel-un-warns-that-there-is-a-dire-situation-in-gaza.html