Congress Working Committee (CWC) meeting: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை (அக்.9) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (ஓபிசி) விரிவுப்படுத்தப்படும்.
2024 மக்களவைத் தேர்தலில் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்றார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் மல்லிகார்ஜூன கார்கே, “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு, பயனுள்ள அரசு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு முக்கியமானது” என்றார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாததையும் கார்கே விமர்சித்தார். அப்போது, மோடி “வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களுக்கு தனது பயணத்தைத் தொடர்கிறார்” என்றார்.
இந்திய தேர்தல் ஆணையம் மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
தொடர்ந்து, ““பிரதமர் மணிப்பூரில் இல்லாதது, தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அவர் அடிக்கடி செல்வதற்கு முற்றிலும் மாறாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மீதான பொய்கள் மற்றும் பொய்களால் நிரப்பப்பட்ட அவரது ஆதாரமற்ற தாக்குதல்கள் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும். இந்த பொய்களை நாம் எதிர்கொள்வது அவசியம்” என்றார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பிளவுபடுத்தும் தந்திரங்கள் ஜனநாயக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும்” என்றார்.
இதற்கிடையில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு 5 மாநிலத்தில் கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
source https://tamil.indianexpress.com/india/reservations-for-obc-women-nationwide-caste-based-census-once-in-power-mallikarjun-kharge-at-cwc-meet-1515771