சனி, 21 மார்ச், 2015

சட்டம் எங்களுக்கு நீதி வழங்கும்

"சட்டம் எங்களுக்கு நீதி வழங்கும் என்னும் முழு நம்பிக்கையில், ஜன நாயக முறையில் எங்களுக்கான உரிமைகளை பெற தொடர்ந்து போராடி வருவோம்; ஒருவேளை எல்லா வழிகளிலும் எங்களுக்கான நீதி மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்படும் பட்சத்தில், பகிரங்கமாக அறிவித்து விட்டு மாற்று வழிகளை தேர்ந்தெடுப்பதில் இந்த ஜமாஅத் ஒருபோதும் அச்சப்படாது..............."
‪#‎தமிழ்நாடு‬ தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கண்ணியத்திற்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள்.
இத்தகைய தெளிவும் - ஆழமான நிதானமும்தான் சமுதாய மக்களிடமும், "காவி தீவிரவாதிகள்" அல்லாத உண்மையான இந்து சமுதாயத்தினரிடமும், தங்கள் மீதும் - தங்களது அமைப்பு மீதும் பெரும் மரியாதை பெருக காரணிகளாக இருக்கின்றன.
சமுதாய நலனுக்காக தாங்களும் - தங்களது அமைப்பும் முன்னெடுக்கும் அனைத்து முயற்ச்சிகளுக்கும் - உழைப்புகளுக்கும் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் - இயக்கங்களும் - கட்சிகளும் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக ஒத்துழைப்பு நல்கும.
தாங்களும் - த.த.ஜ.-வும் தமிழகத்தின் மற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் - கட்சிகளுக்கும், அவர்கள் மேற்கொள்ளும் சமுதாய நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவினை வழங்க வேண்டுமாய் உங்கள் சகோதரன் என்னும் உரிமையில் கேட்டு கொள்கிறேன்.
கடந்த கால தவறுகளை அல்லாஹ்விற்காக மறந்து - மன்னித்து விடுங்கள் ....நமது சமுதாயம் எல்லா திசைகளிலும் "காவி தீவிரவாதத்தால்" சூழப்பட்டிருக்கும் இன்றைய ஆபத்தான காலகட்டத்தில் தங்களை போன்ற தலைவர்களின் வழிநடத்தல்தான் எங்களை போன்ற உங்கள் மாணாக்கர்களுக்கு - சகோதரர்களுக்கு உத்வேகம் தருவதாக இருக்கும்.