சனி, 21 மார்ச், 2015

சகோதரர் "இஸ்லாமிய தமிழன்"........


நீங்கள் செய்வது சமுதாய துரோகம்....!! சகிக்க இயலா வரம்பு மீறல்.....!!!
இந்தியாவின் தொண்ணூறு சதிவிகித மீடியாக்கள் நமது சமுதாயத்தின் மீது உள்ளார்ந்த காழ்ப்புனர்ச்சியுடன் வரிந்து கட்டிக்கொண்டு, நமக்கெதிராக பொய்களை - மெய்கள் என்று நம்ப வைத்து - நம்மை அரசு, ஆட்சி, அதிகாரங்கள் போன்ற ஒவ்வொன்றிலும் தனிமை படுத்தி - கீழ்மை படுத்தும் வேளைகளில் தெளிவாக இறங்கியுள்ள இன்றைய "மீடியா தீவிரவாத நெருக்கடி கால கட்டங்களில்......."
கடந்த சில மாதங்களாக முகநூளில் நீங்கள் நமது சமுதாயத்தின் அனைத்து இயக்க - கட்சி தலைவர்களையும் தனக்கு தோன்றிய படியெல்லாம் வசை பாடி தொடர்ந்து பதிவுகளிட்டு பேரானந்தம் கொள்கிறீர்.
இரண்டு வாரங்கள் முன்பு ஐ.என்.எல். அப்துல் ரகீம் அவர்கள் மீது புழுதி வாரி தூற்றினீர்; மூன்று நாட்கள் முன்பு த.மு.மு.க. தலைவர் அப்துல் சமது அவர்கள் மீதும் எஸ்.ம். பாக்கர் அவர்கள் மீதும்; நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது; இன்று ஆளூர் ஷா நவாஸ் அவர்கள் மீது.......
நீங்கள் த.த.ஜ.-வை தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இழிவு படுத்தி எழுதுவதை பார்த்தால் நீங்கள் த.த.ஜ. உறுப்பினர் என்பது தெளிவாகிறது.
அவ்வாறு நீங்கள் த.த. ஜ. உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அந்த அமைப்பில் இருக்கும் அடிப்படை உரிமையை நீங்கள் இழந்து பல நாட்கள் ஆகிறது. ஏனெனில் "எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பையோ - கட்சியையோ - தலைவர்களையோ - நிர்வாகிகளையோ சமூக வலைதளங்கள் உட்பட எந்த இடங்களிலும் தரக்குறைவான விமர்சனம் செய்ய கூடாது" என்று த.த.ஜ.-வின் தலைமையகம் கடந்த ஆறு மாதங்கள் முன்பு தீர்மானம் நிறைவேற்றி, அதனை பகிரங்க அறிவிப்பும் செய்திருந்தது. நீங்கள் அதனை மீறி இந்த ஒரு வேலையை மட்டும் திரும்ப திரும்ப செய்து கொண்டுள்ளீர்கள்.
நீங்கள் இதன் மூலம் தனிப்பட்ட முறையிலோ - சமுதாய - மார்க்க வகையிலோ சாதித்தது என்ன.....?
நீங்கள் இழிவு படுத்தி எழுதும் தலைவர்களிடம் மார்க்க முரண்பாடுகள் இருக்குமென்றால் இரண்டே வழிகளைத்தான் கையாள வேண்டும்.......ஒன்று அவர்களை நேரிலோ - தொலைபேசியிலோ - மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு விவாதிக்க வேண்டும்; அல்லது அது அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ளது என்று அல்லாஹ்விடத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதை விடுத்து, மார்க்கமோ அல்லது உங்களது அமைப்போ அனுமதி அளிக்காத, பொது இடங்களில் தனது சொந்த சகோதரனை இழிவு படுத்தும் செயலை நீங்கள் செய்வது உங்களுக்கே கேவலமாக படவில்லை.......?
நீங்கள் இந்த முறையற்ற செயல்களை உடனே நிறுத்தி கொள்ளவில்லையெனில், உங்களது பதிவுகள் அனைத்தையும் உங்கள் தலைமைக்கு அனுப்பி உங்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு -விளக்கம் கோரப்படும்.
"ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமது சொந்த சகோதரனை, யாரிடமும் விட்டு கொடுத்துவிடாமல் - சமுதாயத்தையும் - சமுதாய நலனையும் இயன்றவரை பாது காப்பது எப்படி? என்பதனை "காவிகளிடமேனும்" கற்றுக் கொள்ளுங்கள்.