Masjid இடிப்பது குறித்த சுப்பிரமணியசாமியின் சர்ச்சை கருத்தால் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மசூதிகளை இடிப்பது தொடர்பாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் கடும் அமளி நிலவியது.
ராஜ்யசபா இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி, Masjid's இடிப்பது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அவையின் துணைத் தலைவர் குரியன், இது தொடர்பாக விவாதிக்க அவை அனுமதி பெறுமாறு கூறினார். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, குவாஹாட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "Masjid என்பது மத வழிபாட்டு தலமல்ல. அது வெறும் கட்டடம் மட்டுமே. அதை எந்த நேரத்திலும் இடிக்க முடியும். சவுதி அரேபியவில் சாலைகள் அமைக்க சில Masjid இடிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக என்னுடன் யாராவது விவாதிக்க விரும்பினால், அதற்கு நான் தயார்" என கூறியதாக தகவல்கள் வெளியாகின.