வெள்ளி, 13 மார்ச், 2015

வெளிநாட்டு வாழ்க்கை

Puradsifm's photo.
Puradsifm's photo.

...
வெளிநாட்டில் இருக்கும் தொழிலாளிகள் அவரவர் நாட்டிற்கு விடுமுறைக்கு செல்லும்போது கடைகளில் பொருட்கள் வாங்கும் விதம்...
சீனக்காரன் வாங்கும் பொருட்கள்: அவனுக்கு தேவையான ஆடம்பர உடைகள், வாசனை திரவியங்கள் அப்புறம் அவனோட பெண்தோழிக்கு தேவையான ஆடம்பர பொருட்கள்.
ஜப்பான்காரன்: அவனுக்கும் அவனோட தோழிக்கும் தேவையான செல்போன்களும், எலட்ரிக் பொருட்களும்.
ஆனா நம்ம ஆளுங்க வாங்குற பொருட்கள பாருங்க:இந்த தைலம் பாட்டில் யாருக்குங்கனு கேட்டா அவர் சொல்லுவாரு இது எங்க ஊர்ல உள்ள வயசானவங்களுக்கு கொடுக்க,கழுத்துல ரெண்டு செயின் போட்டுருப்பாரு.. என்ன வசதியான்னு கேட்டா அவரு உடனே "இல்லைங்க ஒன்னு அம்மாவுக்கு இன்னொன்னு மனைவிக்குன்னு சொல்லுவாரு."அப்புறம் இந்த காமரா போன் அது என் அக்காவுக்கு,ஏன் இவளோ சாக்லேட்டுன்னு கேட்டா சொந்தகார பசங்க சின்னபுள்ளைங்க நிறைய இருக்குன்னு சொல்லுவாங்க.ஏன் எவளோ கோல்டு வாட்ச்ன்னு கேட்டா ஊர்ல அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, மச்சான், அண்ணன், தம்பின்னு ஒரு பெரிய லிஸ்டே போகும்..அப்புறம் உங்க நண்பர்களுக்குனு கேட்ட சரக்கும், செண்டுபாட்டிலும் இருக்குனு சொல்லுவாரு.கடைசியா எல்லாம் வாங்கிட்டு மூட்ட கட்டிவிட்டு அவரு ஊருக்கு போவதற்காக போடும் துணி போன தீபாவளிக்கு வீட்டில் இருந்து எடுத்து அனுப்பனதா இருக்கும்!
கைல சாதாரண நோக்கியா 1100., இப்படி முகம் மலர தாய்மண்ணில் காலடி எடுத்து வைக்கும் சந்தோஷத்தில் வருபவரே வெளிநாட்டு தொழிலாளி... தன் நலம் மறந்து வீட்டுக்காக நாடு விட்டு நாடு சென்று உழைத்து தனக்காக ஒன்றும் சேர்க்காமல் வருபவரே..