வெள்ளி, 13 மார்ச், 2015

ஒரு ஆட்டு பண்ணை தொழில் தொடங்குவது எப்படி?


ஒரு ஆட்டுப் பண்ணையை தொடங்குவது மிகவும் எளிதான ஒன்று. ஆனால், இது எளிதாக இருப்பதற்கு நாம் முறையான தகவல்களை பெற்றிருக்க வேண்டும். முறையான தகவல்களை அறிந்த பின் தொடங்கப்படும் எந்த ஒரு தொழிலும் இலாபகரமானதாகவே இருக்கும்.
GoatFarming-500x375
தொழிலை தொடங்குவதற்கு சில அடிப்படை தகவல்களை கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் காண்பதன் மூலம் பெறலாம்.
  • எந்த வகையான வியாபாரத்தை செய்யப் போகின்றோம்?
    • ஆட்டுப் பால்
    • ஆட்டிறைச்சி
    • செம்மறியாட்டுக் கம்பளி
  • ஆடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    • எத்தனை வகையான ஆடுகள் இருக்கின்றன?
    • அவற்றின் ஆயுட்காலம் என்ன?
    • சினைக்காலம் என்ன?
    • எவ்வளவு பால் கொடுக்கும்?
    • ஒரு நாளைக்கு எத்தனை முறை பால் கறக்கலாம்?
    • எவ்வளவு கம்பளி வழங்கும்?
    • எத்தனை மாதத்திற்கொருமுறை கம்பளியை வெட்டலாம்?
    • என்ன வகையான உணவுகளை வழங்க முடியும்?
    • ஆடுகளின் பொதுவான நோய் என்ன?
    • பராமரிப்புச் செலவு என்ன?
    • கழிவுகளை என்ன செய்யலாம்?
  • எவ்வளவு பெரிய தொழில் செய்யலாம்?
    • உள்ளூர் தேவைக்கு மட்டும்?
    • உள்நாட்டு தேவை?
    • ஏற்றுமதி?
    • சில்லறை வியாபாரம்?
    • மொத்த வியாபாரம்?
    • எங்கே ஆடுகளை வாங்குவது?
    • எத்தனை ஆடுகள்?
  • வியாபார அனுமதி அல்லது உரிமம்
    • உள்நாட்டு மற்றும் நகராண்மைக் கழக அனுமதி வேண்டுமா?
    • கால்நடை இலாகா சிறப்பு அனுமதி வேண்டுமா?
  • நிலத்தை வாங்கி மேம்படுத்துதல்
எல்லா தகவல்களையும் திரட்டிய பிறகு, எந்த அளவிலான தொழில் செய்யலாம் என்பது தெரிய வரும். பிறகு, அதற்கேற்றவாறு சரியான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • எந்த இடம்?
  • நீர் விநியோகம் உள்ளதா?
  • வாங்குவதா அல்லது குத்தகைக்கு எடுப்பதா?
  • எந்த மாதிரியான கொட்டகைகள் மற்றும் கட்டிடங்கள் வேண்டும்
  • வேலையாட்கள் தெவைப்படுமா?
  • பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
இவற்றையெல்லாம் நாம் கருத்தில் கொண்டு வியாபாரத்தை தொடங்கி வெற்றி பெறலாம்.