Home »
» வாட்ஸ் அப் காலிங்
வாட்ஸ் அப் காலிங் வசதிக்கு வாங்க! (இந்தியர்களுக்கு)
“வாட்ஸ் அப்” தனது அழைப்பு சேவையை ஓராண்டுக்கு இந்திய பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
உலக அளவில் பிரபலமான குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான “வாட்ஸ் அப்” நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ் காலிங் சேவையையும் தொடங்கி விட்டது.
அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப் நிறுவனம்.
ஐபோனைத் தவிர்த்து அன்ட்ராய்ட், ப்ளாக்பெர்ரி, விண்டோஸ் போன்களில் இந்த சேவை கிடைக்கும்.
நீங்கள் செய்ய வேண்டியது.
http://www.whatsapp.com/android/ இந்த லிங்கிற்கு சென்று வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய apk ஃபைலை டவுன்லோட் செய்து உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள். (இது இந்தியாவிற்கான சேவை என்பதால் கூகிள் பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் ஃபைல் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்க) அப்டேட் செய்த பின் இதே சேவையைப் பெற்ற மற்றொரு வாட்ஸ்அப் ரசிகர் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் ரிங் பண்ண வேண்டும். அவ்வளவுதான். அந்த அழைப்பை நீங்கள் ஏற்றப்பின் உங்கள் வாட்ஸ் அப் காலிங் வேலை செய்யத் துவங்கி விடும்.
கால் முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை வாட்ஸ் அப்பினை ஓப்பன் செய்தால் தற்போது ஒரு புதிய திரையினைப் பார்க்கலாம். அதில் call – chat – contacts என்று மூன்று ஆப்ஷன்கள் வந்திருப்பதை பார்க்கலாம். பிறகு வாட்ஸ் அப் ரசிகர்களுக்கு உங்களால் போன் பண்ண முடியும்.
கவனிக்க – மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷனை நிறுவாதவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது. இந்த அப்ளிகேஷனை நிறுவியவுடன் ஓராண்டுக்கு இந்த அழைப்பு இலவசம் என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கும்.
www.whatsappcalling.com என்ற முகவரி போலியானது என்பதையும் அங்கிருந்து வரும் லிங்கை ஏற்க தேவையில்லை என்பதையும் கவனத்தில் கொள்க.
வெளிநாட்டிலுள்ளவர்கள் தங்கள் இந்திய அலைப்பேசி எண்ணில் இதை ஆக்டிவ் செய்துக் கொள்ளலாம்.
வந்துருச்சு “வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” – இதிலாவது “மிஸ்ட் கால்” கொடுக்காம பேசுங்கப்பா!