வெள்ளி, 13 மார்ச், 2015

"கருஞ்சீரகத்தில்' அனைத்துநோய்களுக்கும் நிவாரணம் உள்ளது

"கருஞ்சீரகத்தில்'சாமை'த் தவிர அதாவது மரணத்தைத் தவிர அனைத்துநோய்களுக்கும் நிவாரணம் உள்ளது"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்:புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ,இப்னுமாஜா).பொதுவாககருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள்.. அவசர சிகிச்சைக்கு அருமருந்தாகநோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.
  • குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும். 
  • கபம்குளிர் காய்ச்சல்குறட்டைமூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன்தரும்.
  • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
  • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்குநல்லது.
  • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  • 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vineger) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
  • காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள்வெளியேறிவிடும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
  • நாய்க்கடிபிரசவ இரத்தப் போக்குத் தடங்கல்கர்ப்பபை வலிசிரங்குகண்வலிபோன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரிஉம்தத்துல் காரீஅல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர்.கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே கருஞ்சீரகம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். நன்றி சத்திய மார்க்கம்..

Related Posts:

  • தமிழகம் முதலிடம் இந்தியாவில் ஊழல் செய்வதில் தமிழகம் முதலிடம் - தேசிய பொருளாதார ஆய்வு மையமான NCEAR நடத்திய ஆய்வில் தகவல்... # அகில உலகத்துல முதலிடமான்னு ஆ… Read More
  • ,வரலாறுகளை பொய்யாக ஜோடிக்கிறது. மோடி அரசு ‪#‎இந்துராஷ்ட்ரம்‬ என்னும் பெயரில்‪#‎பிராமணியத்தை‬ நம்மீது திணிக்கிறது,வரலாறுகளை பொய்யாக ஜோடிக்கிறது. சமூக போ… Read More
  • புதுக்கோட்டை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து தேர்தல் நடத்தை விதி: புதுக்கோட்டை அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பால் கல்லூரி வாழ்வின் மிக முக்கியமான … Read More
  • வெயில் கால அம்மை நோய்கள் வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறப்பு என்பதை நினைவில் கொண்ட… Read More
  • NOTA -NONE OF THE ABOVE NOTA -NONE OF THE ABOVE (நோட்டா பட்டம் அனைத்து வாக்கு மிஷின்களிலும் கீழே கடைசியில் இருப்பதால்,மேலே உள்ள அனைத்திற்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை … Read More