சனி, 28 மார்ச், 2015

அநீதிகள் மேலும் தொடராவண்ணம் தடுத்து நிறுத்தி

மோடி ஆட்சி வந்ததிலிருந்து, நமது தேசத்தில் - நமது முஸ்லிம் சமுதாயத்தவருக்கு, ரகசியமாகவும் - பகிரங்கமாகவும் ஏற்படும் சொல்லொணா அநீதிகள் மேலும் தொடராவண்ணம் தடுத்து நிறுத்தி, சமுதாயத்தை காவி தீவிரவாதிகளின் திட்டமிடப் பட்ட அழிவிலிருந்தும் காப்பாற்றிட கீழ்க்காணும் 10 விஷயங்கள் தீர்வாக இருக்கும் என நான் நம்புகிறேன்....
எனது கருத்துக்களில் - நம்பிக்கையில் உங்களுக்கும் உடன்பாடு உண்டு என்றால் உங்களது ஒப்புதலை SHARE மூலம் பதியவும்.
1) மிகைத்த வல்லமையாளன் அல்லாஹ் விதித்ததை தவிர வேறொன்றும் எங்களை நெருங்காது என்னும் அசைக்க இயலாத நம்பிக்கை அருளாளன் அல்லாஹ்வின் மீது.
2) நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அல்லது நேரத்தை கிடைக்கும்படியதாக ஆக்கி திருமறையை தெளிந்த விளக்கத்தோடு அறிந்து கொள்ளுதல்.
3) ஐவேளை தொழுகையை பற்றிபிடித்தல்; நபிகளார் தடுத்தவற்றை - ஹராமானவற்றை இயன்றவரை தவிர்த்தல் - தவிர்ந்திட முழு முயற்ச்சி எடுத்தல்.
4) குடும்ப - பொருளாதார முன்னேற்றத்தில் ஓய்வின்றி கவனம் செலுத்துதல்; தொழி துறையில் பிரம்மாண்ட அளவில் உயருதல்.
5) மார்க்க கல்வி - உலக கல்வி இல்லையென்றால் நாம் கல் - மண்ணை விட உபயோகம் அற்றவர்கள் என்பதை உணருதல்.
6) "அரசியல் எனக்கு பிடிக்காது; அரசியல் என்று சொன்னாலே எனக்கு வெறுப்பு" என்பன போன்ற பத்தாம் பசலித்தனமான சிந்தனைகளை விட்டும் வெளியில் வந்து, அரசியலில் நாம் ஒதுங்கி நிற்பதால்தான் நமது சமுதாயம் எதிர்த்து நிற்க ஆதரவின்றி - அதிகார துணை இன்றி படிப்படியாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்னும் ஆபத்தான உண்மையை புரிந்து, அரசியல் - அதிகாரங்களை வென்றெடுக்க, ஆழமான அரசியல் அறிவை பெறுவது.
7) "எல்லா முஸ்லிம் இயக்கங்களும் - கட்சிகளும் ஒன்றாக ஆகி ஒரே இயக்கமாக அல்லது ஒரே கட்சியாக ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்" என்னும் ஒரு காலத்தும் நடக்க இயலாத ஒரு விஷயத்தை எண்ணி வீணாக காலம் கடத்தாமல், தனித்தனி கொள்கைகளுடன் - செயல்பாடுகளுடன் நமது சமுதாய நலன் விரும்பும் அனைத்து கட்சிகளின் - இயக்கங்களின் நல்ல விஷயங்களை பகிரங்கமாக ஆதரித்து - தவறான விஷயங்களை ரகசியமாக ஆனால் கடுமையாக கண்டித்து எந்த ஒரு இடத்திலும் என் சகோதரனை விட்டு கொடுக்க மாட்டேன் என்னும் மனோபாவத்தை வளர்த்து கொள்ளுதல்.
8) இந்து சகோதரர்கள் வேறு; காவி தீவிரவாதிகள் வேறு என்பதை முதலில் நாம் நன்கு விளங்கி கொண்டு, அந்த இருவருக்குள்ளும் இருக்கும் எதிரெதிர் வேறுபாட்டை அனைத்து உண்மையான இந்து சகோதரர்களிடமும் கொண்டு சேர்த்து, இந்து - முஸ்லிம் சகோதர பந்தத்தை முன்பு இருந்ததை விட - இப்பொழுது இருப்பதைவிட - அதிகமாக - வலுவாக - வேகமாக அமைப்பது.
9) R.S.S மற்றும் அதன் அத்தனை துணை அமைப்புகளையும் - அவர்களது கொள்கைகள் - கோட்பாடுகள் - செயல்பாடுகள் - பயங்கரவாத திட்டமிடல்கள் அனைத்தையும் நொடிப்பொழுதும் விலகாத கண்காணிப்புடன் பின் தொடர்ந்து, அவைகள் அனைத்தையும் ஆதார தெளிவுகளுடன், உண்மையான இந்துக்களிடமும் - முஸ்லிம்களிடமும் - அனைத்து இந்தியர்களிடமும் தொடர்ந்து கொண்டு சேர்த்தல்; நமது சமுதாயத்திற்கு - தேசத்திற்கு எதிரான எந்த செயல்களும் நடந்து விடுவதற்கு முன்னர் அதனை வெளிப்படுத்தி, அவர்கள் தலைதூக்க எண்ணும் பொழுதெல்லாம் அவர்களது திட்டங்களை தகர்த்தல்.
10) நமது சமுதாயத்தின்மீது பயங்கரவாத பொய் பட்டம் சுமத்தி, நமது சமுதாயத்தை மட்டும் குறி வைத்து கடித்து குதறிடும் இந்திய ஊடகங்களை நெஞ்சுரத்தோடு - வலுவான ஆதார தெளிவுகளோடு - அறிவுப் பிழம்பாய் பாய்ந்துவரும் வாதத் திறமைகளோடு எதிர்கொள்ள, தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் - கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட தற்பொழுதைய "ஊடக சந்திப்பாளர்கள்" அனைவரையும் உள்ளடக்கிய, நமது சமுதாயத்திற்கென "பொது ஊடக சந்திப்பாளர் அமைப்பை" உருவாக்கி, எந்த ஊடகங்கள் நம்மை இந்த தேசத்தை விட்டும் தனிப்படுத்தும் இயந்திரமாக சுழல்கிறதோ, அதே ஊடகங்கள் நமது சமுதாயத்தின் உண்மையின் பக்கம் சுற்றி சுழல வைப்பது.
--T.H.MU--

Related Posts: