வெள்ளி, 1 ஜூலை, 2016

ஸ்வாதி கொலை வழக்கு திசை திருப்பப்படுகிறதா? வலுக்கும் சந்தேகங்கள்…- பின்னணியில் யார்?

ஸ்வாதி படுகொலை திசை திருப்பப் படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் இவ்வாறு தெரிவிக்கிறார்….
“சுவாதி கொலை தொடர்பாக தொடர்ந்து படித்து வருகிறேன். தீர்க்கப்படாத பல குழப்பஙகள் இதில் இருக்கின்றன.
சுவாதியின் செல்போனை எடுத்துச் சென்றது கொலையாளியா அல்லது வேறு யாருமா என்று சந்தேகமாக உள்ளது. செல்போன் காணாமல் போனால்கூட அதில் உள்ள தகவல்களை செர்விஸ் ப்ரொவைடர்களிடமிருந்து பெற முடியும். சுவாதியின் செல்போன் சுவாதியின் வீட்டருகே ஆன் செய்யபட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படியெனில் இந்த கொடிய செயலைச் செய்தவர் நன்கறிந்த ஒரு நபரா?
சுவாதியைக்கொன்றது ஒரு முஸ்லீம் என்ற தகவல் யாரால் எங்கிருந்து பரப்பப்படுகிறது? எந்த தடயமும் இல்லாத இந்த குற்றத்தில் எதற்காக இப்படி ஒரு சந்தேகம் பரப்பப்படுகிறது? இதை ஏதோ இந்துத்துவா சதி என்றெல்லாம் அவசரமாக புரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த செய்திகளை பரப்புகிற யாரோ சிலருக்கு இந்த்தக் குற்றம் தொடர்பாக வேறு ஏதோ உண்மைகள தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவை மறைக்ககப்படவும் திசைதிருப்பபடவுமே கொலைகாரன் முஸ்லீம் என்ற தகவல் பரப்பபப்படுகிறது. இந்தக் கதையில் நடுவில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஏதோ ஒரு கேரகடர் மறைக்கப்படுகிறது. அந்தக் கேரகடர் கொலைகாரனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
சுவாதியின் சாதி அடையாளமும் அவரது தனிப்பட்ட நல்லொழுக்கமும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றன். இது இயல்பான ஒன்றாக தோன்றவில்லை, சுவாதி அப்படிப்படவரல்ல என்பதல்ல பிரச்சினை, அவர் யாரால் எதற்காக கொல்லப்பட்டார் என்பதுதான் கேள்வி.
சுவாதியின் கொலை நம் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்துகிறது. அந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்கவேண்டும்.அதற்கு கொலைக்கான உண்மையான காரணங்கள மறைக்கப்படாமல் வெளியே கொண்டுவரப்படவேண்டும்”
ஊடகவியாளர் Bharathi Anand தனது பதிவில்..
“நொய்டா ஆருஷி வழக்கு போல் ஆகிவிடுமோ … நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கு விசாரணை‪#‎சுவாதி‬
ஊடகவியாளர் Sindhan Ra :

ஸ்வாதி மரணத்தை முன்வைத்து கிளம்பும் சாதிவெறிப் பதிவுகள் நமக்கு அந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.