இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க, கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் சுஷில்குமார் மிஸ்ரா என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இந்தியப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார். அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், கூகுள் நிறுவனம் விளக்கமளித்திருந்தது.
இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
http://ns7.tv/ta/google-lists-pm-modi-top-criminals-gets-court-notice.html