சனி, 2 ஜூலை, 2016

போலீசின் உழைப்பு, புத்திக் கூர்மை, புலனாய்வுத் திறன் இவற்றைப் பாராட்டவும் கடமை உள்ளது.


ஒரு வார தீவிர புலனாய்வுக்குப் பிறகு ஸ்வாதியை கொலை செய்த ராம்குமாரை போலீஸ் கைது செய்துள்ளது..போலீசின் மெத்தனம், அலட்சியம், பொறுப்பற்றத்தனம் என்று வசைபாடி கண்டிக்க உரிமை உள்ள நமக்கு போலீசின் உழைப்பு, புத்திக் கூர்மை, புலனாய்வுத் திறன் இவற்றைப் பாராட்டவும் கடமை உள்ளது.
தனிப் படைகள் அமைத்து.. இரவு பகலாக தீவிரமாக உழைத்து..ஒரே ஒரு வீடியோ காட்சியை வைத்துக் கொண்டு அத்தனை சாத்திய வழிகளிலும் இறங்கி..அடையாள அட்டைகள் உள்ள பான் கார்ட், ஓட்டர்ஸ் கார்டு, ஆதார் கார்ட், டிரைவிங் லைசென்ஸ் என்று அத்தனை டேட்டா பேஸ்களிலும் தேடி..
சூளைமேடு பகுதியில் உள்ள செல்போன் டவரில் கடைசியாக பிங் ஆன ஸ்வாதியின் செல்போன் சிக்னல் வைத்து லட்சக்கணக்கான மொபைல் அழைப்புகளை ஆராய்ந்து.... சூளைமேடு பகுதியில் வீடு வீடாக விசாரித்து ஒரு மேன்ஷன் காவலாளி மூலம் தலைமறைவான ராம்குமார் அடையாளம் காட்டப்பட்டு.. அவன் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தி.. அவன் செங்கோட்டை அருகில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்து.. அங்கு விரைந்து..அவனை மடக்கி.. தற்கொலைக்கு முயன்ற அவனை உயிருடன் பிடித்து..தன் காலரை நிமிர்த்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு போலீசுக்கு விரைப்பான ஒரு ராயல் சல்யூட்.
ஒரே ஒரு கேள்வி: ஆக.. ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையான திறமையான புத்திசாலித்தனமான தமிழ்நாடு போலீஸ் நினைத்தால் எந்தக் குற்றத்திலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்தானே? பல பிரபலமான கொலைகளில் வருடக் கணக்காக துப்பறிந்துகொண்டே டே டே.. இருப்பதால் இதையும் கேட்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு விஷயம் உண்மை என்று நிரூபனமாகிறது. அரசியல் தலையீடுகள் இல்லை என்றால் தமிழ்நாடு போலீசால் எந்த வழக்கையும் கண்டுபிடிக்க முடியும்!

Related Posts:

  • சல்லிக்கட்டுக்குத் தடை. நோக்கம் என்ன? Read More
  • நாகபுஷ்ப்பம் இமயமலை பகுதியிலுள்ள நாகபுஷ்ப்பம். இது 36 ஆண்டுக்கொருமுறையே பூக்கும் அபூர்வஇனம். வெள்ளிக்கிழமை காலை 3.30 க்கு எடுக்கப்பட்ட புகைப்படம். … Read More
  • 2-வது இடத்தில் இந்தியா! உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதில் 2-வது இடத்தில் இந்தியா! புதுடெல்லி,  உலக அளவில் பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள… Read More
  • கச்சா எண்ணெய்யை ஈரான் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய உத்தரவு ! துபை,  ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதார தட… Read More
  • ரோபோக்களின் அதிகரிப்பால் ரோபோக்களின் அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் ஆபத்து ! தாவோஸ்,  சமீபகாலமாக, தொழிலாளர்… Read More