1997 ஆம் ஆண்டில் சங்கீதா என்கிற ஒரு இளம் பெண் இஸ்லாத்தை ஏற்றார். தனது பெயரை அவர் ஆயிஷா சித்திக்கா என்றும் மாற்றிக்கொண்டார். அவர் ஒரு முஸ்லிம் இளைஞனை காதலித்து திருமணமும் செய்து கொண்டிருந்தார்.
ஒரு ஹிந்துப் பெண் எப்படி ஒரு முஸ்லிமை கல்யாணம் செய்யலாம்? அதுவும் அந்தப் பெண் எப்படி இஸ்லாத்தை ஏற்கலாம்? என்று கொதிப்படைந்த காவி பயங்கரவாதிகள் அவர்களுக்கு சாதகமான ஊடக பயங்கரவாதிகளை கொண்டு அந்த இளம் பெண்ணை ஒரு தீவிரவாதியாக சித்தரித்தனர்.
அந்த பெண்ணை மனித வெடிகுண்டு என்று வாய்க்கூசாமல் அவதூறை தொடர்ந்து எழுதினார்கள் அந்த ஊடக பயங்கரவாதிகள்.
அன்றுவரை கோவைக்கே சென்றிராத அந்தப் பெண், கோவையில் வைத்து அத்வானியை கொலை செய்ய திட்டமிட்டிருந்தாள் என்று தொடர்ந்து எழுதினர்.
அந்த பெண்ணின் எடை வெறும் நாற்பது கிலோ மட்டுமே. ஆனால் அவள் உடல் முழுதும் நூறு கிலோ எடையுள்ள வெடி மருந்துகளை சுமந்து கொண்டு நடமாடும் வெடிகுண்டாக திரிந்து வருகிறாள் என்று தொடர்ச்சியாக எழுதி தள்ளினார்கள் ஊடக பயங்கரவாதிகள்.
இந்த ஊடக வேசிப்பிள்ளைகள் இப்படி முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருவதை அவதானித்த கருணாநிதியின் அன்றைய திமுக அரசு இதன் உண்மை நிலையை மக்களுக்கு விளக்க முற்படாமல், அந்த பெண்ணை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு நான்கு லட்சம் பரிசுத் தரப்படும் என்று அறிவித்தது.
முஸ்லிம் பெண்கள் வீதி தோறும் காவல்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக ஒரு முஸ்லிம் பெண்ணை சோதித்த காவல்துறையை சேர்ந்த அயோக்கியன் அந்த பெண்ணின் மார்பகங்களை சுட்டிக்காட்டி "என்னடி ரெண்டு குண்டு வெச்சிருக்கே?" என்று கிண்டலடித்தான் என்று அன்று முஸ்லிம்களிடையே பரவலாக பேசப்பட்டது.
நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்த காவல்துறையினர் சோதனை என்கிற பெயரில் அவர்களின் படுக்கையறை வரை சென்று ரவுடித்தனம் செய்து வந்தனர்.
முஸ்லிம்களுக்கு ஏதிராக காவிகளுடன் கைகோர்த்து மீடியா பயங்கரவாதிகள் செய்த அவதூறை அன்றைய திமுக அரசு அப்படியே நம்பி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் அசிங்கப்படுத்தியது. முஸ்லிம் சமுதாயத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றி மகிழ்ந்தது.
இறுதியில் அந்த ஆயிஷா சித்திக்கா என்கிற பெண்ணும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு நீதி மன்றம் அவர்களை நிரபராதிகள் என்று விடுவித்தது.
சிறையிலிருந்து வெளியே வந்த அந்த தம்பதியர்களிடம் அவர்களின் குழந்தை கூட நெருங்கவில்லை. ஏனெனில் தனது தாயை தீவிரவாதி என்று மீடியாக்கள் பரப்பிய தாக்கம் அந்த குழந்தையையும் விட்டு வைக்கவில்லை.
பதவி சுகத்திற்காக காவிகளுக்கு கூனிக் குறுகி கும்பிடு போட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் குற்றவாளி கூண்டில் ஏற்றிய கருணாநிதியின் திமுக அரசையும்,
காவிகள் தன் சாதிக்கார நடிகர்களை வைத்து சுவாதி என்கிற பெண்ணை கொன்றவர் பிலால் மாலிக் என்கிற ஒரு வதந்தியை பரப்பி, இந்த கொலைக் குற்றத்தில் ஜெயலலிதா அரசு ஒரு முஸ்லிமைத்தான் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அழுத்தம் கொடுத்தும், அதை எதையும் கண்டு கொள்ளாமல் உண்மையான குற்றவாளியை கைது செய்த ஜெயலலிதாவின் அதிமுக அரசையும் நம்மையும் அறியாமல் நம் மனம் ஒப்பிட்டு பார்க்கிறது.
நன்றி அன்பின் அறிவழகன்