வெள்ளி, 15 ஜூலை, 2016

‪#‎மதுரை‬ ‪#‎போலி_வெடி_குண்டு‬


பொய் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞன் அபுபக்கர் சித்திக் இன்று வழக்கறிஞர் மூலம் தனது வேதனையை சமுதாய மக்களிடம் தெரியப்படுத்த கூறியதாவது...…
கடந்த 2012 ஆம் ஆண்டு காவல்துறை சந்தேகத்தின் பேரில் என்னை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ....
மதுரை அண்ணா நகரில் இருக்கும் ராமர் கோவில் அருகே சைக்கிளில் வெடி குண்டு வெடித்ததாகவும் அது சம்மந்தமாக என்னிடம் விசாரிக்க வேண்டும் என்றும் சில கேள்விகள் கேட்டனர்
நான் அண்ணா நகரில் அப்படி ஒரு கோவில் இருப்பதே நீங்கள் (காவல்துறை) சொல்லித்தான் தெரியும் என்றேன் ..
முஸ்லிம் அமைப்புகள் நடத்தும் போராட்டம்,ஆர்ப்பாட்டங்ளுக்கு செல்வது உண்டா? என கேட்னர் நான் ஆமாம் என்றேன்
பின்னர் சில கேள்விகள் என்னிடம் கேட்டு விட்டு எனது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என கேட்டனர் நானும் எனது கைரேகையை பதிவு செய்ய சம்மதித்தேன்
பின்னர் ஒரு நாள் முவுவதும் என்னை காவல் நிலையத்தில் தங்க வைத்து எனது கைரேகையும், வெடி குண்டு வைக்கப்பட்டதாக சொல்லப்படும் சைக்கிளில் இருந்த கைரேகையையும் ஒப்பிட்டு பார்த்த காவல்துறையினர் நான் குற்றவாளி இல்லை என என்னை அனுப்பி வைத்தனர்..
4 ஆண்டுகள் கடந்த நிலையில் ....
கடந்த சில நாட்களுக்கு முன் என் கடைக்கு வந்த CBCID SID போலிஸார் என்னை விசாரணை செய்ய வேண்டும் என அழைத்து சென்று எந்த கேள்வியும் விசாரணையும் செய்யாமல் உன்னை அண்ணாநகர் ராமர் கோவில் அருகே வெடித்த வழக்கில் கைது செய்துள்ளோம் என கூறினர்
நான் எவ்வளவோ என் தரப்பு நியாயங்களை எடுத்து கூறியும் விசாரணை உயர் அதிகாரியான ADSP மாரிராஜன் அவர்கள்
என்னப்பா செய்ய... நீ இல்லை என எங்களுக்கும் தெரியும் ..
மேலிடத்திலிருந்து வழக்கை முடிக்க ப்ரஷர் செய்கிறார்கள் நீதான் முஸ்லிமாச்சே...இது உன் விதியில் உள்ளதாக நினைத்து மனதை தேற்றிக்கொள் என்றார்...
மற்றொரு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ....
ஒன்னும் கவலைப்படாமல் போப்பா...கூடிய சீக்கிரம் உனக்கு துணையா பெரிய,பெரிய தலைகள் எல்லாம் வருவாங்க எனக் கூறினார்...
சமுதாயமே ..!நான் செய்த தவறு தான் என்ன?
நான் முஸ்லிமாக பிறந்ததா?
அல்லது முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதியில் வசித்து வருவதா?
அல்லது இஸ்லாமிய அடிப்படையில் தாடி வைத்ததா?
அல்லது சமுதாய அமைப்புகள் பேதமின்றி அனைவரின் போராட்டங்களிலும் கலந்து கொண்டதா?
என்னை கைது செய்த தகவல் வேண்டுமானால் தாமதமாக உங்களுக்கு கிடைத்திருக்கலாம்!
அதற்காக இவ்வளவு தாமதமாகியும் என் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கிற்காக யாரும்,எந்த அமைப்பும், ஜமாஅத்தும் குரல் கொடுக்காதது ஏன்?
என் மஹல்லாவில் இருக்கும் ஜமாஅத் நிர்வாகிகளோடும், அனைத்து அமைப்பு நிர்வாகிகளோடும் நல்ல நட்புறவோடுதானே இருந்தேன்..
உங்களில் யாராவது என்னை குற்றம் செய்பவன் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறமுடியுமா?
தற்போது நான் கவலைப்படுவது எல்லாம் என்னை பற்றி அல்ல..
இன்னும் என்னைப் போன்ற எத்தனை அப்பாவி இளைஞர்களை நம் சமுதாயம் பொய் வழக்கிற்காக காவு கொடுக்கப்போகிறதோ என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது...
இன்று நான்
நாளை யாரோ...
வருத்தத்துடன்...
மதுரை CBCID SID பிரிவால் இன்று முதல் தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட அபு (எ) அபுபக்கர் சித்திக்(முஸ்லிம்)
விசாரணை சிறைவாசி
மத்திய சிறைச் சாலை
மதுரை.16
(kaalaimalar) 

Related Posts: