வெள்ளி, 15 ஜூலை, 2016

தாத்திரி சம்பவம்: கொலை செய்யப்பட்ட அக்லாக் மீதே வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் இன்று உத்தரவு

தாத்ரி சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட முஹம்மது அக்லாக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பசு பாதுகாப்பு சட்டத்தின் (UP Cow Protection Act, 1955) கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு நொய்டா போலிசிற்கு சுரஜ்புர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் தடையையும் மீறி உள்ளுர் பிஜேபி மற்றும் சிவசேனா தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் 20 நாட்களுக்குள் முஹம்மது அக்லாக் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வில்லை எனில் இந்த ஊரில் இருப்பவர்கள் பொதுமக்களின் கோபத்தினால் கடும் விலைவை சந்திப்பார்கள் என போலிசிற்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.
முஹம்மது அக்லாக்கை கொலை செய்த கொலைகாரனின் தந்தையும் உள்ளுர் பிஜேபி தலைவருமான சஞ்சை ரானா என்பவர் இது குறித்து கூறுகையில்:
20 நாளைக்குள் போலிசார் முஹம்மது அக்லாக் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனில் கோபத்தில் எங்களது ஆட்கள் ஏதாவது செய்தால் அதை எங்களால் தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முஹம்மது அக்லாக் மற்றும் அவரது குடும்பத்தினர்
முஹம்மது அக்லாக் மற்றும் அவரது குடும்பத்தினர்
அதை தொடர்ந்து முஹம்மது அக்லாக்கை கொலை செய்த கொலைகாரர்கள் சுரஜ்புர் கோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இதில் பசுவை வெட்டியதற்காக முஹம்மது அக்லாக் மற்றும் அவரது குடும்பத்தார்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கூறியிருந்தார்கள். (பார்க்க : http://www.thehindu.com/news/national/dadri-lynching-bishada-residents-defy-prohibitory-orders-to-hold-mahapanchayat/article8696352.ece)
போலிசிற்கு எச்சரிக்கை விடுத்த பிஜேபி மற்றும் சிவசேனாவை சேர்ந்தவர்கள்
போலிசிற்கு எச்சரிக்கை விடுத்த பிஜேபி மற்றும் சிவசேனாவை சேர்ந்தவர்கள்
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய் குமார், பிஜேபி மற்றும் சிவசேனா தலைவர்களின் ஆணைக்கினங்க முஹம்மது அக்லாக் மற்றும் அவரது குடும்பதார் மீது வழக்கு பதிவு செய்யுமாறும் அக்லாக் குடும்பத்தார் மீது விசாரனையை துவக்குமாறும் போலிசிற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
நீதித்து துறை எந்த அளவிற்கு காவித்துறையாக மாறிவிட்டது என்பதை விளக்குவதற்கு முன்னர் முஹம்மது அக்லாக் வீட்டில் மாட்டு கறி இருந்ததா, மாட்டு கறி உண்டாரா, மாட்டை வெட்டினாரா என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.
அவர் மாட்டை வெட்டினார், மாட்டு கறி உட்கொண்டார் என்பதற்கு அவரது வீட்டில் மாட்டு கறி இருந்தது என்பதை தான் ஆதாராக இவர்கள் காண்பிக்கின்றனர்.
அக்லாக் வீட்டில் இருந்தது மாட்டு கறியா
உபி அரசின் கால்நடை துறை, முஹம்மது அக்லாக் வீட்டில் இருந்த இறைச்சிகளை படுகொலை சம்பவத்தின் போது கை பற்றி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் வீட்டில் இருந்தது மாட்டு கறி அல்ல ஆட்டுகறி தான் என தெரியவந்தது. அதை தொடர்ந்து உபி அரசின் கால்நடைதுறையே ”அவரது வீட்டில் இருந்தது மாட்டுகறி அல்ல ஆட்டுகறி தான்” என அறிக்கை வெளியிட்டது.
”To the best of my knowledge and after a proper physical examination, it appears the meat [about 4-5 kg] is of goat progeny,” said the veterinary officer in his report.
உபி அரசின் உத்தரவின் பெயரில் ஆய்வு செய்த கால்நடை துறையே அவரது வீட்டில் மாட்டிறைச்சி இல்லை என அறிக்கை தாக்கல் செய்த நிலையில் கோர்ட் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதில் பிஜேபி அரசு எந்த அளவிற்கு தீவிரமாக செயல்படுகின்றது என்பதையே காண்பிக்கின்றது.
கொலைகாரனின் தந்தை சஞ்சை ரானா மேலும் தெரிவிக்கையில்:
”forensic lab முஹம்மது அக்லாக் வீட்டில் இருந்த இறைச்சியை ஆய்வு செய்துள்ளது. அதன் ரிபோர்ட் தற்போது வந்துள்ளது. அதில் அது மாட்டிறைச்சி தான் எனக் கூறிப்பட்டுள்ளது. நாங்கள் இதை தான் ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தோம் யாரும் எங்கள் பேச்சை கேட்கவில்லை தற்பொது உண்மை வந்து விட்டது” எனக் கூறியுள்ளார்.
ஆனால் போலிஸ் அளித்துள்ள அறிக்கையில் forensic lab ஆய்வு செய்தது முஹம்மது அக்லாக் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி அல்ல எனத் தெரிவித்துள்ளது.
போலிஸ் அளித்துள்ள இந்த அறிக்கையையும் உபி அரசின் கால்நடை துறை அளித்த அறிக்கையை காலில் போட்டு மிதித்துவிட்டு சிவசேனா மற்றும் பிஜேபி காரர்களின் மனதை குளிர வைப்பதற்காகவும் சகோதர வாஞ்சையுடன் வாழும் இந்து முஸ்லிம் சகோதரர்களிடையே கலவரத்தை உருவாக்கி முஸ்லிம்களை ஒடுக்கும் எண்ணத்திலும் காவி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த உண்மைகளை அனைவருக்கும் தெரியப்டுத்துங்கள். ஜாகிர் நாயக் விசயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போனதை தொடர்ந்து முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்க பிஜேபி அரசு மீண்டும் தாத்ரி விசயத்தை கையில் எடுத்துள்ளது. ஆரம்பத்திலேயே இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டவன் மீதே கொலைகாரன் கொடுத்த மனுவை ஏற்று வழக்கு பதிவு செய்யும் அவள நிலை உலகில் வேறு எங்கும் நிகலாது.
மாட்டு கறி வைத்திருந்தார் என்ற குற்றாசட்டிற்காக (அது பொய் என்பது நிரூபிக்கப்பட்டது)  ஒருவர் மீது வழக்கு போடலாம் எனில் மாட்டுகறி ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதல் இடம் வகிகின்றதே மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதே அனைவரின் மீதும் வழக்கு போடாதது ஏன்?
beef
சமூக வளைதலங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட பலர் நாக்கை புடுங்கம் அளவிற்கு கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
(Kaalaimalar) 
13669065_1020173981385269_944199885430801436_n

Related Posts: