காஷ்மீரில் என்ன நடக்கிறது?
------------------------------------------------
காஷ்மீரில் அரசு தரும் செய்தியை தவிர வெளி உலகிற்கு தெரியாமல் அப்படி என்ன தான் அங்கு நடக்கிறது????
இந்த கேள்விக்கு விடைதேடும் முன்
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு 22 வயது தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு லட்சம் மக்களுக்கு மேல் கலந்து கொண்டனர் என்று அவர்களை அடக்கி,ஒடுக்கி...சுட்டுக் கொல்லுகிற இந்திய அரசே சொல்கிறது என்றால், உண்மையில் அங்கு எத்தனை லட்சம் மக்கள் கலந்துகொண்டு இருப்பார்கள்?
இதுவரை அவர் மரணத்திற்காக நடந்த போராட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல்.
ஒரு தீவிரவாதிக்கு இவ்வளவு மக்கள் ஆதரவா?அதுவும் பெண்களும்,குழந்தைகளும்,இளைஞர்களும் கடுமையாக போராடுகிறார்கள்.
அப்படி என்றால் சுட்டுக் கொல்லப்பட்டவர் உண்மையிலேயே தீவிரவாதி தானா? எந்த கேள்வி எழுகிறது இல்லையா?
சிந்தித்துப் பாருங்கள்.
அப்படி என்றால் சுட்டுக் கொல்லப்பட்டவர் உண்மையிலேயே தீவிரவாதி தானா? எந்த கேள்வி எழுகிறது இல்லையா?
சிந்தித்துப் பாருங்கள்.
ஜார்ஜ் வாஷிங்டனும், பெஞ்சமின் பிரங்களினும் இங்கிலாந்து அரசின் பார்வையில் தீவிரவாதிகள் . ஆனால் அமெரிக்க மக்களின் பார்வையில் போராளிகள்..
சேகுவாரா அமெரிக்க அரசின் பார்வையில் தீவிரவாதி . ஆனால் லத்தின் அமெரிக்க மக்களின் பார்வையில் போராளி ..
உமர் முக்தார் இத்தாலி அரசின் பார்வையில் தீவிரவாதி .. ஆனால் லிபியர்களின் பார்வையில் போராளி ..
சுபாஷ் சந்திர போஸும் , பகத் சிங்கும் இங்கிலாந்து அரசின் பார்வையில் தீவிரவாதிகள் .. ஆனால் இந்தியர்களின் பார்வையில் போராளிகள்
நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்க அரசின் பார்வையில் தீவிரவாதி .. ஆனால் தென் ஆப்ரிக்க கறுப்பர்களின் பார்வையில் போராளி ..
அஹ்மத் யாசினும் , யெஹ்யா அய்யாசும் இஸ்ரேலின் பார்வையில் தீவிரவாதிகள் .. பாலஸ்தீனர்களின் பார்வையில் போராளிகள் ..
உமர் கத்தாப் ரசியாவின் பார்வையில் தீவிரவாதி .. ஆனால் செசன்யர்களின் பார்வையில் போராளி..
இவ்வளவு ஏன் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் இலங்கையின் பார்வையில் தீவிரவாதி,ஆனால் உலகம் முழுவதும் வாழ்கிற தமிழர்களுக்கு போராளி...
இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் .தீவிரவாதம் , தீவிரவாதிகள் என்ற அடைமொழிகள் எல்லாம் நாட்டிற்கு நாடு இடத்திற்கு இடம் வேறுபடும்..
ஆக்கிரமிப்ப்பாளர்களை , அநீதி இழைப்பவர்களை பொறுத்தவரை தங்களை எதிர்த்து போராடுபவர்களுக்கு வைக்கும் அடைமொழி தீவிரவாதி..
ஆனால் அநீதி இழைக்கப்பட்ட அந்த சமூகத்தை பொறுத்தவரை தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஹீரோ.. இது தான் எதார்த்தமான உண்மை.
ஆக காஷ்மீர் மக்களின் நலனுக்காக போராடிய ஒரு போராளியை கொன்று விட்டு,இந்திய அரசு தீவிரவாதி என்று நாடகம் ஆடுகிறதா?என்கிற சந்தேகம் இயல்பாக எழுகிறது.காரணம் அங்குள்ள மக்கள் ஆதரவு.
இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்றவன் ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க முடியாது.அவன் ஒரு போராளி என்பதில் மாற்று கருத்து இருக்கவே முடியாது.

அப்படி என்றால் இந்த நாட்டை ஆளுகிற அரசு மக்கள் நல அரசா?மக்கள் விரோத அரசா?
இந்த நாட்டு மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டு மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
இப்படிதான்
தமிழர்களுக்காக பாடுபட்ட தமிழரசனை தீவிரவாதி என்று சொல்லி அடித்தே கொன்றார்கள்.
தமிழர்களுக்காக பாடுபட்ட தமிழரசனை தீவிரவாதி என்று சொல்லி அடித்தே கொன்றார்கள்.
தமிழகத்தின் எல்லைக் கடவுளாக நின்று தமிழகத்தை பாதுகாத்த வீரப்பனை தீவிரவாதி என்று சுட்டுக் கொன்றார்கள்.
தமிழர்களின் விடுதலையையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த புதுக்கோட்டை முத்துக்குமாரை தீவிரவாதி முத்திரைக் குத்தி ஒழித்துக்கட்டினார்கள்.
ஆகவே
தோழர்களே காஷ்மீர் தேசிய இனத்தின் சிக்கல்களை அறிந்து,இந்திய அரசு சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும்.
ஆகவே
தோழர்களே காஷ்மீர் தேசிய இனத்தின் சிக்கல்களை அறிந்து,இந்திய அரசு சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும்.
மக்களின் சிக்கல் என்ன என்பதை அறிய முயலாமல்,சொந்த நாட்டு குடிமக்களை இராணுவத்தைக் கொண்டு சுட்டுக் கொன்றால்,நாம் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும்.
அதற்காக ஒருங்கிணைந்து போராட அணியமாக வேண்டும்.
நன்றி.
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும்.
அதற்காக ஒருங்கிணைந்து போராட அணியமாக வேண்டும்.
நன்றி.
(வட்ஸ் அப் செய்தியோடு இணைந்து -
இந்திய இஸ்லாமிய அரசியல்
)