திங்கள், 4 ஜூலை, 2016

‪#‎அடுத்த_பெரும்_அபாயம்‬ ‪#‎நாடுமுழுவதும்_முஸ்லீம்கணக்கெடுப்பு‬


இந்துத்தீவிரவாத இயக்கமான RSSன் ஒரு பிரிவான"விஸ்வஹந்த் பரிஷத்"தின் தலைமை ரவுடியான பிரவீண் தொகாடிய அறிவித்துள்ளான்.
அதாவது உபியில் கைரானாவில் சொன்ன அதே அவதூறு பாணிதான்
இந்தியா முழுவதும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில்
"வாழமுடியாமல்" "விரட்டப்பட்ட" இந்துக் குடும்பங்களைப் பற்றிக் கணக்கெடுப்பு தொடங்கப் போகிறார்களாம்.
அவர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவது,சொத்துக்களை மீட்பது என்ற பெயரில் நாடு முழுவதும் கலவரம் நடத்தத் திட்டமிடப் படுகிறது.
"வெளியேற்றப்பட்ட" 'ஹிந்து'க்களைக் கணக்கெடுக்கும் பெயரில் முஸ்லீம்கள் பெரும்பான்மை பகுதிகளை கணக்கெடுத்து பிரிவினைப்படுத்தும் திட்டம்தான் இது.
பங்களாதேஷ் எல்லைப்பகுதியான வடகிழக்கு மாநிலங்களில் முஸ்லீம் ஊடுறுவல் பீதியைக் கிளப்பி அசாம் பாணியில் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிடுகிறார்களெனத் தெரிகிறது
மேலும் வடகிழக்கு மாநிலங்களின் தேசியஇனப் போராட்டங்களையும் ஒடுக்க, திசைதிருப்ப இந்த முஸ்லீம் 'பீதி'யைப் பயன்படுத்துவார்கள்.
இந்தக் கணக்கெடுப்புப் பணியை உடனே தொடங்கி 6மாதத்திற்குக்குள்ளாக முடிக்கப் போகிறார்களாம்.
இது அடுத்தடுத்து வரவிருக்கும் சட்டசபை தேர்தலைக் குறிவைத்து செய்யப்படுவதோடன்றி அந்தப் பதட்டத்தை பாராளுமன்றத் தேர்தல் வரைக்கும் கொண்டுசெல்வார்கள்.
பாசிசம் வேகமாக பரவுகிறது
எச்சரிக்கை எச்சரிக்கை...

Related Posts: