ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 4500 மக்கள் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருகின்றனர். இதனால் பல மக்கள் இறந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய விஞ்ஞானிகள் புதிய முறையினை கையாண்டுள்ளனர்.

அது என்னவென்றால் இனி சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு குறிப்பிட்ட இரத்தம் உள்ளவர்கள் சீறுநீரகத்தையும் தாண்டி நன்கொடையாளார்கள் எந்த இரத்த வகையினை சார்ந்தவராக இருந்தாலும் அதனை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தும் வசதியினை கண்டுபிடித்துள்ளனர். முன்பு சீறுநீரகம் கொடுக்க வேண்டுமெனில் ஆறு உடற்காப்பு ஊக்கிகள் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் பொருந்த வேண்டும்.
ஆனால் தற்போது அது தேவையே இல்லை என்று ஆய்வாளார்கள் கூறுகின்றனர். தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் thatthis நோய் எதிர்ப்பு quieting மாற்று முறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் சீறுநீரகம் பாதிக்கப்பட்டவர் உடலில் உடற்காப்பு ஊக்கிகளினை அதிகப்படுத்தி மாற்று சீறுநீரகத்தினை அவர்கள் உடலில் பொருத்துவதால் அது நல்ல பலனை அளிக்கிறது என்பதை நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வினை மேலும் உறுதிப்படுத்த 1000-ற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் 77% நோயாளிகள் உயிருடன் ஆரோக்கியமாக இருந்தனர். முதல் முறையாக இந்த ஆய்வு வெற்றி பெற்றுள்ளது. இதனால் பல்லாயிரம் உயிர்களை இனி காப்பற்ற முடியும் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அறுவை சிகிச்சை பேராசிரியர் Dorry Segev கூறினார். இந்த வெற்றி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு