வியாழன், 7 ஜூலை, 2016

உண்மையாகவே தொடர்பு இருந்தால் கைது சரியானது. ஆனால் உண்மை இருக்கிறதா என்பதே இப்போது சந்தேகம்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி திருப்பூரை சார்ந்த மளிகைக் கடை வியாபாரி மொஷிருதின் கைது.
உண்மையாகவே தொடர்பு இருந்தால் கைது சரியானது.
ஆனால் உண்மை இருக்கிறதா என்பதே இப்போது சந்தேகம்..
ஆம் காஸ்மீர் / குஜராத் / மகாராஷ்டிரா / டெல்லி கர்நாடக தொடர்ந்து தமிழகத்திலும் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதாகவே கருதுகிறேன்.
ஆமாங்க 2012 ஆம் ஆண்டு அப்பாவி வெங்காய வியாபாரி அதிராம்பட்டினத்தை சார்ந்த தமீம் அன்சாரியை பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகளை கொடுத்து சொந்த லாபத்திற்கு செய்ததாக பொய் வழக்கு மூலம் கைதும் செய்துனர்..
பல மாதங்கள் போராட்டத்திற்கு அவர் ஒரு அப்பாவி வெங்கையா வியாபாரியே அவர் மீது எந்த தவறும் இல்லை என்று நீதிமன்றம் தீர்பு கொடுத்தது.
அதே போல்தான் இந்த திருப்பூர் அப்பாவி முஸ்லிம் கைது என்ற சந்தேகம் வருவது இயல்பே..
இதைசரியான முறையில் முதல்வரின் கவனத்துக்கு இயக்கங்கள் கொண்டு செல்லவேண்டும் என்பதே சாமனியன் வேண்டுகோள்...

Related Posts: