சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் 2010ல் வெளியிட்ட சக்திவாய்ந்த 100 இந்தியர்களின் பட்டியலில் ஒருவராகஇடம் பெற்ற உலகம் முழுதும் அறிய பட்ட இஸ்லாமிய அறிஞர்டாக்டர் "ஜாகிர் நாயக்" மீதான மத்திய அரசு மற்றும் மராட்டிய அரசின் வெறுப்பு உணர்வு அரசியலை கண்டித்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 11-00 மணியளவில் சேப்பாக்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக,தேசியலீக்,இந்திய தவ்ஹீத் ஜமாத், உள்பட 23 அமைப்பின் சார்பில் கலந்துக் கொண்டனர்.



