டாக்கா (12-07-16): இந்தியாவின் கிழக்குப் பகுதிகளை மொத்தமாக அழக்கும் மிகப்பெரிய பூகம்பம் வங்கதேச பூமிக்கு அடியில் நிலைகொண்டிருப்பதாக ஆய்வில் தெரிவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய நதிப்படுகையின் கீழ் உள்ள 2 கண்டத் தட்டுக்களில் (டெக்டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கண்டத்தட்டு எல்லையில் பிளவு ஏற்பட்டால் சுமார் 14 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதாவது பூகம்பத்தால் ஏற்படும் அழிவு மட்டுமின்றி நதிகளின் போக்கிலும் மாற்ற ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிளேட்டுகள் கடலுக்கடியிலேயே இதுவரை மாறுதலடைந்து பல உயிர்களை காவு வாங்கியது. எடுத்துக்காட்டாக உலகின் சிலி பூகம்பம், சுமத்ரா பூகம்பம் மற்றும் சுனாமி, பகுஷிமாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் ஆகியவை கடலுக்குள் ஏற்பட்ட மாற்றங்களாலே நிகழ்ந்தது.
அது தற்போது நிலவவுள்ளதாகஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மாற்றங்கள் நிலப்பகுதியில் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டால் அந்த பகுதியே காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது என்று டாக்கா பல்கலைக் கழக ஆய்வாளர் சையத் ஹுமாயுன் அக்தர் தெரிவித்துள்ளார்.