அஞ்சலங்களில் கங்கை நீர் விற்பனை: ‘பிணம் மிதக்கும் புனித நீர்’.
.இப்போதைக்கு கங்கா நீர் அப்புறம் கோமியமா????.
திருப்பதி லட்டும் கங்கா தீர்த்தமும் தபால் சேவைகளா?
“கங்கை நீரை குடிக்கக்கூடாது; ‘சேவை’ நோக்கத்தில் விற்கிறோம்”: தபால் துறை
இந்துக்களின் புனித நீராக கருதப்படும் கங்கா தீர்த்தத்தை பார்சல் மூலம் வீடுகளில் டெலிவரி செய்யும் திட்டம் மத்திய அரசு சமீபத்தில் தொடங்கியது. இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘புனித தலங்களான ரிஷிகேஷ், கங்கோத்திரியில் இருந்து எடுக்கப்படும் கங்கை தீர்த்தத்தை இனி அஞ்சலகம் மூலம் வீடுகளில் பெறலாம்’’ என்று தெரிவித்தார். கங்கை நீர் டெலிவரி குறித்து முகநூலில் வெளியாகியிருக்கும் சில பதிவுகள் கீழே.. முகப்பில் கூகுளில் கங்கா என தேடும்போது முதலில் வந்து நின்ற படம், ‘பிணம் மிதக்கும் புனித நீர்’
Karan Karki : இப்போதைக்கு கங்கா நீர் அப்புறம் கோமியமா????
.மேல் சட்டையற்ற நான்கு இளைஞர்களை (கேடுகெட்ட மிருகங்கள் ;அந்த கழிசடைகளை மனிதனென்ற வகையில் சேர்க்கவே முடியாது) அப்படி தாக்குகிறார்கள் அவர்கள் பயங்கரவாதிகள் இல்லையா? தேச பக்தர்களா?
.இந்த கேடுகெட்ட கொடூரங்களை நிறுத்துங்க அப்புறம் கங்கா நீரையும்,கோமாதா மூத்திரத்தையும் விற்கலாம்.
.தொலைக்காட்சி நிகழ்வுகளை பார்காதவர்கள் அந்த அநீதியை கண்டிருக்க முடியாது…அடப்பாவிகளா.
அந்த நான்கு இளைஞர்களும் பசுமாட்டு தோலை வைத்திருந்தார்களாம்.
.அட எல்லாவற்றையும் விற்கும் வியாபாரிகளா…….தாக்கிய கயவர்கள் மீது என்ன நடவடிக்கை??????
கங்கை நீரை அஞ்சலகங்களில் விற்பது தொடர்பான செய்திகள் இரண்டு நாட்களாக அடிபடுகின்றன. .கங்கை நீரை புனித நீராக ஒருவர் கருதுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் அதை ஏன் அஞ்சலகங்களில் வைத்து விற்கவேண்டும்?
குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கை சார்ந்த ஒன்றை மத்திய அரசு அலுவலகங்களின் வழியே சந்தைப்படுத்துவது அப்பட்டமாக மதசார்பின்மைக்கு எதிரான செயல். மேலும் அந்த நீருக்கு குடி நீருக்கான தரக்கட்டுப்பாடு எதுவும் செய்யப்படவில்லை. கேட்டால் ‘ அது தெளித்துக்கொள்வதற்கான நீரே தவிர குடிப்பதற்கான நீர் அல்ல ” என்று பதில் வருகிறது. புனித நீர் சுகாதார நீராக இருப்பதும் முக்கியம் இல்லையா? புனித கங்கை நீரை நாடு முழுக்க மத்திய அரசு அலுவலங்களில் பாட்டிலில் அடைத்து விற்பதற்கு பதில் கங்கை, காவிரி இணைப்பை மோடி செய்துவிட்டால் நாடு முழுக்க கங்கை நீர் கலந்து பாரத தேசமே புண்ணிய தேசமாக மாறிவிடாதா?

இன்னும் என்னவெல்லாம் இந்த நாட்டில் நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. புனித சடங்குக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களால் மாசடைந்திருக்கும் புனித நீர்… அஞ்சல் துறையில் இருந்த தந்தியை மூடிவிட்டார்கள். Postal order களை எந்த கல்வி நிறுவனமும் கேட்பதில்லை. கடிதாசியும் இல்லை மணிஆர்டரும் போச்சி. .ஸ்டாம்புகள் அருங்காட்சியகத்தில் , வட்டியை குறைத்து ஊக்க தொகையை ஒழித்து சிறு சேமிப்பு பழக்கத்தையும் அழித்தாகிவிட்டது. பிறகு என்ன செய்வது. ஆரம்பிபித்து விட்டார்கள் அஞ்சலகத்தில் புனித நீர் விற்க. .டுத்து கோமியம் , யாகம் வளர்க்க சுள்ளி கட்டு , விபூதி ,சந்தனம் என்று தொடரலாம். இதையெல்லாம் விற்பதற்கு 30000, 40000 சம்பளத்தில் மத்திய அரசு ஊழியர்கள் . சீக்கிரமே வல்லரசாகிவிடும் இந்தியா.
.Ammachatram Saravanan : அஞ்சல் அலுவலகங்களில் புனித(!) கங்கை நீர் விறுவிறுப்பான விற்பனை. 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. – செய்தி.
விரைவில் திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஒவ்வொன்றாக அஞ்சல் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படலாம். thanks to Modi for devolped india
கங்கை நீரை குடிக்கக்கூடாது; ‘சேவை’ நோக்கத்தில் விற்கிறோம்”: தபால் துறை .தபால் நிலையங்களில், கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பாட்டில்களில் கங்கா நீர் என்று மட்டும் அச்சிடப்பட்டிருக்கிறது. அது குடிப்பதற்கு உகந்ததா என்பது பற்றிய சுகாதாரத்துறையின் எந்தவித அறிவுறுத்தலும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளது புதிய தலைமுறை. மேலும் இந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கங்கை நீர் என்பதால் இதனை வாங்க ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இந்த கங்கை நீரை குடிக்கக்கூடாது என்று தபால் துறை தற்போது அறிவித்துள்ளது. இது குடிக்க உகந்த நீர் அல்ல என்று பாட்டிலிலேயே அச்சிடப்பட்டுள்ளதாகவும் தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. லாப நோக்கில் அல்லாமல் சேவை நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மண்டல தபால்துறை கூறியுள்ளது..சேவை நோக்கமெனில் மற்ற மதங்களின் புனித நீரும் விற்பனைக்கு வருமா என்பதை நாம் கேட்க நினைக்கிறோம்.
திருப்பதி லட்டும் கங்கா தீர்த்தமும் தபால் சேவைகளா?
தினம்தோறும் திருப்பதி லட்டு, கங்கா தீர்த்தம்!’ -திசைமாறும் தபால் நிலையங்கள்
ரிஷிகேஷ் மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து கங்கை நதியின் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது’ என பெருமைப்படுகின்றனர் தபால் துறை அதிகாரிகள். .அதே சமயம் ‘ தபால் வேலையைத் தவிர, பல சரக்குக் கடைகளாகவும் தபால் நிலையங்கள் மாறுகின்றன’ என ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பும் நிலவுகிறது. 200 மில்லி பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை, தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் விற்பனைத் தொடங்கி உள்ளது.
தபால் சேவை என்பது, மிகவும் விலை குறைவான தகவல் தொடர்பு சாதனம். இதனை வலுவாக்குவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .ஆறு கார்ப்பரேட் கம்பெனிகளாக தபால் துறையைப் பிரிக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. .திருப்பதி லட்டு கொடுப்பது, கங்கா நீர் கொடுப்பது, விண்ணப்பங்களை விநியோகிப்பது என அதன் நோக்கத்திலிருந்து திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது தபால் துறை.
பல சரக்குக் கடையை மட்டும்தான், தபால் நிலையங்களில் திறக்கவில்லை. உண்மையான கங்கை தண்ணியைக் கொடுக்கிறார்களா எனத் தெரியவில்லை. கிராமப்புற அஞ்சலகர்கள் என்ற பெயரில் நிரந்தரப் பணியில் அல்லாத, தற்காலிக ஊழியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. திருப்பதி லட்டும் கங்கா தண்ணியும் தபால் சேவைகளா? .தனியாரிடம் தபால் துறையை ஒப்படைக்கும் முயற்சியாகத்தான், இதுபோன்ற சித்து வேலைகளை மத்திய அரசு செய்கிறது. நாமும் அதையேதான் கேட்கிறோம். திருப்பதி லட்டும் கங்கா தீர்த்தமும் தபால் சேவைகளா?
ஜூலை 13, 2016