சனி, 2 ஜூலை, 2016

கோமாதாவை கொல்லும் காவி

கோமாதாவை கொல்லும் காவி ஹிந்துத்துவா தீவிரவாத RSS கும்பல்
ஆர்.எஸ்.எஸ் கும்பலும் உழைக்கும் மக்களும் மாட்டை எப்படி பார்க்கின்றனர்? -போட்டோ ஆதாரம்
ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு மாட்டுக்கறி அரசியல் என்பது இந்துக்களை இசுலாமியர்களுக்கு எதிராக நிறுத்தவும் மாட்டுக்கறி உண்ணும் சூத்திர தாழ்த்தப்பட்டவர்களை கொலை செய்து பார்ப்பனியத்தைத் தூய்மைப்படுத்தவும் துருப்புச் சீட்டாக பயன்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன் முதலாக ராஜஸ்தானில் பசு நல வாரியம் என்று தனியாக அமைச்சகம் மூலம் கோச்சார்-துங்கபத்ரா ஆற்றுப்படுகையில் பசு பாதுகாப்பு மையத்தை அமைத்தது பிஜேபி பார்ப்பன பரிவாரங்கள். கோமாதா புனிதமானது என்று விவசாயிகளை பால்மடி வற்றிய மாடுகளை விற்கவிடாமல் பிடுங்கிக் கொண்டுபோய் கோசாலையில் சேர்த்தார்கள். ஆனால் இங்கு பசுக்களுக்கு அன்ன ஆகாரம் தண்ணீர் ஏதும் கொடுக்காமல் நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்து பசுக்களைக் கொன்றிருக்கிறது பி.ஜே.பி. இதற்கு ஆதாரமாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த புகைப்படத்தை வாசகர்கள் முன் வைக்கிறோம். வாயில் நுரைதள்ளி செத்துக்கிடக்கும் இந்த கோமாதாக்கள், ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் மாட்டு அரசியல், பார்ப்பன மேலாண்மைக்கானதேயன்றி பசுக்களின் நலனுக்கானதல்ல என்பதை நிரூபிக்கிறது.
மாறாக இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது சிறு உற்பத்திக்கு பயன்படும் கால்நடைகளை இயக்குநர் சொல்வது போல தங்கள் பிள்ளை போல பார்த்துக்கொள்கின்றனர். சாம்பிராணி புகை போடுகின்றனர். பால் மடி வற்றி, உழவுக்கு ஆகாது எனும் பொழுது மேற்கொண்டு மாட்டைப் பராமரிக்க முடியாத விவசாயிகள் மாடுகளை விற்கின்றனர், அவை கறிக் கடைக்குத்தான் போகிறது என்றாலும். ஏனெனில் இதுதான் இயற்கையான பொருளாதார சங்கிலியாகவும் புது கால்நடைகளை அபிவிருத்தி செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது. இந்த சுழற்சியை கோமாதா அரசியல் பேசி நிறுத்தினால் விவசாயியும் கால்நடையும் என இருவருமே செத்துப்போகிறார்கள்.
நன்றி: தி இந்து ஆங்கில நாளேடு. (Cows dying in Rajasthan despite special Ministry to protect them - http://www.thehindu.com/…/cows-dying-des…/article8701729.ece)