வியாழன், 14 ஜூலை, 2016

அவர்களுக்காக குரல் கொடுக்க பயமாக உள்ளது

காஷ்மீர் மக்கள் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்காக குரல் கொடுக்க பயமாக உள்ளது காரணம் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களை தீவிரவாதி பயங்கரவாதி என்ற முத்திரை குத்தி விடுமோ இந்த அரசும் மீடியாக்களும் என்ற அச்சத்தில்
இதுவரை இந்திய பாகிஸ்தான் அரசுகளின் அரசியலில் சிக்கித்தவித்து வந்த காஷ்மீரிகளுக்கு
தற்போது கூடுதல் வேதனையாக பிஜேபி யின் மதவெறி அரசியலும் சேர்ந்துகொண்டு அவர்களை சித்தரவதை செய்கின்றது
காஷ்மீரில் நடைபெறும் காட்சிகள் பாலஸ்தீன் இஸ்ரேலை நினைவு படுத்துகின்றது
பிஜேபி மோடி அரசு தன்னுடைய உண்மை முகத்தை குரோதத்தை மதவெறியை காஷ்மீரில் கட்டவிழ்த்து விட்டுள்ளதற்கு இப்படங்கள் சாட்சி
காஷ்மீரிகளை தற்போது கொன்று குவிப்பது இந்திய இராணுவமா அல்லது சங்கபரிவார கும்பல்களால் துப்பாக்கி பயிற்சிகொடுக்கப்பட்ட மத தீவிரவாதிகளா என்று தெரியவில்லை .
துப்பாக்கி இருக்கின்றது , ஆட்சி அதிகாரம் கையில் இருக்கின்றது என்று இன்றைக்கு எவ்வளவு வேண்டாலும் ஆட்டம் போடலாம்
இவை அனைத்திற்கும் படைத்தவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்
பாதிக்கப்படும் மக்களுக்காகவும்
பாதிக்கப்பட வைக்கும் ஆட்சியாளர்களுக்காகவும் இறைவனிடத்தில் பிரார்த்திப்போம் .
ஈழத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக எப்படி மனவேதனை அடைந்தோமோ அதுபோன்ற வலியே இப்பொழுதும் ஏற்படுகின்றது
...............thanks to ...........முத்துராஜா 


.

Related Posts: