பழனியில் முருகன் கோயிலுக்கு வெளியே சிலர் மாட்டுக்கறி தின்று கொண்டிருந்தது இந்து மதத்தை அவமதித்தது போன்றுள்ளதாக அவர்கள் மீது ஹிந்து முன்னேற்ற(!) கழகம் என்ற பெயரில் தொடுத்த பொதுநல வழக்கு ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.
வழக்கு தொடுத்த கோபிநாத் என்பவருக்கு பதிலடியாக, நீதிமன்றத் தீர்ப்பில் முத்தாய்ப்பாக, கீழ்க்கண்ட வரிகள் செவிட்டில் அறைந்தார்போன்று சொல்லப்பட்டுள்ளன.
* அசைவ உணவு வகைகளை உண்பது குற்றம் என்று இந்திய குற்றவியல் நடைமுறையில் (Indian Penal Code) எங்குமே சொல்லப்பட வில்லை.
* எந்த மதத்தவரின் உணவு பழக்கத்தையும் விமர்சிப்பது இந்திய சட்டத்தில் இல்லாத ஒன்று என்பதால் இந்தியர் ஒருவர் மாட்டுக்கறி தின்பது குற்றமாகாது.
அப்பாவி மக்களுக்கு மதவெறியூட்டும் மாட்டுக்கறி அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது நீதிமன்றத் தீர்ப்பு மூலம், மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
தீர்ப்பின் நகல்:
மாட்டுக்கறி அறுப்பதில் பாஜகவின் இரட்டைநிலைபாடு பற்றி வரைந்த கார்ட்டூன் இணைப்பில்.
Thx.to Br. Moh'd Sardhar