கோவா, பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
கோவாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரையில் கோவாவில் நடைபெற்ற தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. மொத்தம் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் மோதல்கள் நடைபெற்றதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். பஞ்சாபை பொறுத்தவரை மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க., சிரோண்மணி அகாலிதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என, மொத்தம் 1,145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பதிவு செய்த நாள் : February 04, 2017 - 09:42 PM