டெல்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பிக்கும், இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
இந்நிலையில் இடது சாரி அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியவாறு கார்கில் போரில் உயிரிழந்த ஒரு ராணுவ வீரரின் மகள் குர்மேகர் கவுர் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
அவருக்கு ஏ.பி.வி.பி அமைப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பாலியல் “பலாத்காரம் செய்து விடுவோம்” என்றும் “கொலை செய்து விடுவோம்” என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தேசிய பெண்கள் ஆணையத்தில் அவர் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து தேசிய பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கவுரின் புகார் மீது உடனடியாக வழக்கு பதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
kaalaimalar