மதிப்பு நீக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் அபராதம் வசூலிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வைத்திருந்தால் அபராதம் வசூலிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கரன்சி சேகரிப்பு ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் 25 நோட்டுகள் வரை வைத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 10 நோட்டுகளுக்கு மேல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களை வைத்திருப்பது தெரிய வந்தால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பண மதிப்பு நீக்கம் நடைமுறையில் இருந்த ஒன்றரை மாதத்தில் வெளிநாட்டில் இருந்தவர்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பதிவு செய்த நாள் : February 04, 2017 - 12:00 PM