கடந்த 2016 ஆம் ஆண்டில், இணைய மீறலை (Cyber breach) எதிர்கொண்ட மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள், அவர்களது வாடிக்கையாளர்கள், வாய்ப்புகள் மட்டுமல்லாமல் 20 சதவீத வருவாய் இழப்பை எதிர்கொண்டனர் என்று சிஸ்கோ நிறுவனத்தின் 2017 ஆம் ஆண்டு இணைய பாதுகாப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
13 நாடுகளிள் உள்ள 3,000 தலைமை பாதுகாப்பு அதிகாரிகள் (CSO) மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தலைவர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இணைய மீறல் குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு பயிற்சியினால் 2 மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று பிரவீன் ஸ்ரீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். முதலில், நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளின் முதல் கட்ட பாதுகாப்பு வலையமைப்பு (Network) என்றார். இரண்டாவதாக, ஒரு நிறுவனம் என்றால் அதில் இணைய மீறல் (Hacking) என்பது கட்டாயமாக இருக்கும் என்றும் அதனால் அந்த மீறல்களுக்கு உடனே தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மின்னஞ்சல் அனுப்புனரின் நடவடிக்கைகளை கண்காணித்து பாதுகாப்பு மையம் அவரை தடை செய்வது ஐபி தடை (IP Block) ஆகும். பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளான பிரேசில், மெக்ஸிகோ, வியட்நாம் மற்றும் சீனாவிலும் ஐபி தடை உயர்ந்துள்ளது என்று ஸ்ரீனிவாசன் கூறினார், குறிப்பாக இந்தியாவில் ஐபி (IP) தடை 85 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.
இணைய மீறல்களை தடுக்கவும் இணையம் மற்றும் கணிணி தொழில்நுட்பத்தை மர்ம நபர்களின் தாக்குதல்களில் இருந்து தடுக்கவும் ஐபி தடையானது மிகவும் பயன்படுவதாக ஸ்ரீனிவாசன் கூறினார்.
சிஸ்கோவின் அறிக்கைபடி, மொத்த மின்னஞ்சல் அளவில் 65 சதவீத ஸ்பேம் கணக்குகள் 'நெகுர்ஸ்' என்னும் பாட்நெட் மூலம் அனுப்படுப்வதாகவும், இதில் 8 சதவீதம் தீங்கழிக்கக்கூடியவை என்றும் தெரியவந்துள்ளது.
சிஸ்கோ ஆய்வின்படி, பாதிக்கப்பட்ட 20 சதவிகித நிறுவனங்கள் அவர்களது வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர் என்றும், இணைய மீறலுக்கு உள்ளான 40 சதவீத நிறுவனங்கள் அவர்களது 20 சதவீதத்திற்க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். மேலும் 29 சதவீத நிறுவனங்கள் வருவாய் இழப்பையும், 23 சதவீத நிறுவனங்கள் அவர்களின் தொழில் வாய்ப்பையும் இழந்தனர்.
சர்ச்சைக்குரிய மர்மநபர்களின் விளம்பரங்களை பயனீட்டாளரின் அனுமதியில்லாம ஒரு சில பழைய மென்பொருட்கள் தானாகவே பதிவிறக்கம் செய்வதின் மூலமும் பல இணையதள கணக்குகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கணக்குகள் அதிக அளவில் இணைய மீறல்களுக்கு உள்ளாகின்றன என்றும் சிஸ்கோ ஆய்வில் மூலம் தெரியவந்துள்ளது.
http://ns7.tv/ta/tamil-news/technology/7/2/2017/cyber-attacks-cost-companies-20-cent-revenues-2016