சனி, 25 பிப்ரவரி, 2017

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்’’ பிரம்மாண்ட பேரணி, மிரள வைத்த இளைஞர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமத்து இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வலைத்தளங்களின் மூலம் போராட்டத்திற்கு நெடுவாசல் கிராமத்து இளைஞர்கள் ஆதரவு கோரியிருந்தனர்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டு புரட்சி இளைஞர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னையை சேர்ந்த ஐ.டி. ஊழியர்கள் நெடுவாசல் கிராமத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினர். இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகன பேரணி நடத்தி வருகிறார்கள்.
இதில் 300 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500 க்கும் அதிகமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கறுப்பு கொடி கட்டி நெடுவாசல் கிராமத்தில் இருந்து 100கி.மீ தூரத்திற்கு பேரணியாக சென்று மீண்டும் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து நிறைவு செய்கிறார்கள்.
இந்த பேரணியின் போது, வழியில் உள்ள அந்தந்த கிராமத்து இளைஞர்களும் இந்த வாகன பேரணியில் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த திட்டத்திற்கு தடை விதிக்கவும், நாளை நடைபெறும் மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியும் இந்த பேரணியை தொடங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

http://kaalaimalar.net/hydro-carbon-plan-neduvasal/