வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கொள்ளிக்கட்டையால் சொரிந்த கருணாஸ்! இஸ்லாமியர்களை மதவாதிகள் தான் ! அதிர்ச்சி பேட்டி



திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து சசிகலா தரப்பின் பக்கம் நின்றவர் கருணாஸ்.
முதலமைச்சரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்னர்,
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகர் கருணாஸ் கூறியதாக, ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. இதனால் பல பேர் கருணாஸை விமர்சித்து கருத்துக்கள் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் கூறியதாவது:
முதலமைச்சர் தேர்வு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், நான் கூறாத கருத்தை கூறியதாக சில பேர் சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பி வருகின்றனர்.
நான் ஒரு சமூகத்தை சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்து தான் செல்கிறேன்.
நான் சட்டமன்ற உறுப்பினரானது எனது சமூகத்தில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை. இந்த தொகுதியில் வாக்காளா்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமானோர்.
எனக்கு வாக்களித்து வெற்றிப் பெறவைத்த 76, 786 மக்களுக்காக நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன். நான் எந்த கருத்தை தெரிவிப்பதாக இருந்தாலும், வெளிப்படையாகவே தெரிவிப்பேன்.
என்னை விட குறைவாக வாக்குவாங்கினார் திமுக வேட்பாளா் தினகரன், ஜான்பாண்டியன் 9 ஆயிரம் வாக்கு வாங்கினார்.
 இஸ்லாமிய மதவாத அமைப்பு 9 ஆயிரம் வாக்கு வாங்கியது என்று தனக்கே உரிய முறையில் சதிராட்டம் ஆடினார்.
இவர் சசிகலா பக்கம் இருந்தபோது அங்கு எம்எல்ஏக்களுக்கு சரக்கு வாங்கிக் கொடுப்பது.
விலைமாதுக்களை ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் வந்தது. அதனால் சமூக வலைதளங்கள் மீது கடும் கோபம் கொண்டு இருந்தார்.
தற்போது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆவேசமாக பேசிய அவா் பல்வேறு மதத்தினர்கள் உறுப்பினர்களாக இருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி பற்றி  ஏடாக்கூடமாக சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
அந்த அமைப்பு ஜல்லிகட்டு போராட்டத்தின் போது முன்னணியில் இருந்து போராட்டக்காரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://kaalaimalar.net/karunas-press-meet/