!
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டத்தால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். விவசாய நிலங்கள் பெரும் பாதிப்படையும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைமைக்கு தள்ளப்படும் என புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மிகப்பெரிய போராட்டம் கடந்த 13வது நாளாக அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு ஆய்வு நடத்தப்பட்டு குறியிட்டு வைத்துள்ள இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டதாகவும், அங்கு மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த தயாராவதாகவும் அந்தப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டமான நெடுவாசலை அடுத்து தற்போது வட மாநிலங்களுக்கு விரைந்து வேலூரைக் குறிவைத்திருக்கிறது மீத்தேன் திட்ட நிறுவனம். இதனால் வட தமிழகத்திலும் மிகப்பெரிய போராட்டத்தை தூண்டிவிட்டு தமிழகமே தத்தளிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
http://kaalaimalar.net/hydrocorbon-next-plan-vellore/