வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

குஜராத் சட்டசபையில் கலவரம்! காங். MLA வின் காலை உடைத்த பி.ஜே.பி. MLA!-


குஜராத் சட்டப்பேரவை கூட்டத்தின் போது, விவசாயிகள் தற்கொலை பற்றி எதிர்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
அப்போது ஆளுங்கட்சியான பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் காங்கிரசின் பல்தேவ் ஜி என்பவரை தாக்கத் தொடங்கியுள்ளனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
இதில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களும் காயம் ஏற்பட்டது. இறுதியாக 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாடல் என்று அடிக்கடி சொல்லி வரும் பா.ஜ.க. இன்று தமிழக மாடலை பின்பற்றியுள்ளதாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறது காங்கிரஸ்.

source: tv9