குத்துச் சண்டை உலகின் ஜாம்பாவனாக திகந்த முகமது அலியின் மகன் அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்துச் சண்டை உலகின் பிதாமகனாக விளங்கிய முகமது அலி மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று, அந்த துறையின் ஜாம்பவானாக திகழ்ந்தார்.
மறைந்த முஹம்மது அலியின் இரண்டாம் மனைவி கலிலா கமாச்சோ அலி. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மகன்களில் ஒருவரான முகமது அலி ஜூனியர், தனது தாயார் கலிலா கமாச்சோவுடன் ஜமைக்கா நாட்டில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு கடந்த 7-ம் தேதி விமானம் மூலம் வந்தார். இங்குள்ள ஃபோர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் ‘நீ முஸ்லிமா?’ என்று திரும்பத் திரும்ப கேட்டுள்ளனர்.
ஆம், நான் முஸ்லிம்தான் என்று கூறியதும், தொடர்ந்து தேவையில்லாத பல கேள்விகளைக் கேட்டு அவரை சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்ததாக செய்திகள் வெளியாகின.
அமெரிக்க விமான நிலையங்களில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் இஸ்லாமியர்களை இதுபோன்ற மன உளைச்சலுக்கு உட்படுத்துவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் இதேபோன்று சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://kaalaimalar.net/muhammad-alis-son-claims-he-was-profiled-after-being-detained-for-two-hours-at-a-florida-airport/