சனி, 25 பிப்ரவரி, 2017

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அதிகம் என அதிர்ச்சி தகவல்!

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை, உலகளவில் இந்தியாவிலேயே அதிகம் என, உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

உலக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 32 கோடி ஆகும். இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ள நிலையில்,  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 5 கோடியே 70 லட்சம் ஆக உள்ளது. 

மனக்கவலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள்  3 கோடியே 80 லட்சம் பேர் ஆகும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், உரிய சிகிச்சை கிடைக்காத நபர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 

தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் மன அழுத்தத்தைக்  குணப்படுத்தலாம் என்றும், ஆனால் 50 சதவீதம் பேருக்கு சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 

வேலையின்மை, அன்பானவரை இழப்பது, உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.