வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

ஹைட்ரோகார்பன்கள் என்றால் என்ன?

ஹைட்ரோகார்பன்கள் என்பவை ஆக்சிஜனின் உதவியோடு எரிந்து ஏராளமான சக்தியை உமிழும் எரிபொருட்கள். ஹைட்ரோகார்பன்களை எரிக்கும்போது வெளியாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எந்திரங்கள், மோட்டார்கள், மின் நிலையங்கள் இயங்குகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றை மொத்தமாக ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கிறோம். 

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டம்
  
நாடெங்கும் சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோகார்பன்கள் புதைந்திருக்கும் நிலப்பரப்புக்களை அரசு கண்டுபிடித்திருக்கிறது. சிறிய அளவிலேயே இருப்பதாலும், தோண்டி எடுக்க நிறையச் செலவாகும் என்பதாலும், அரசு அந்தப் பொறுப்பை தனியார் நிறுவனங்களத்திடம் ஏலத்திற்கு விடுகிறது.

இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் (Discovered Small Field) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியும், மற்றும் காரைக்கால் பகுதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

அதே போல், இந்தியாவின் மற்ற மாநிலங்களான அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய் 22 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவைத் தோண்டியெடுக்கும் ஒப்பந்தங்களை மத்திய அரசு வடிவமைத்திருக்கிறது 

புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹைட்ரோகார்பன் வயலை கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜெம் லெபராட்டரிக்கு மத்திய அரசு ஏலத்தில் விற்றிருக்கிறது. ஹைட்ரோகார்பன்களில் ஒரு வகையான மீத்தேன் எடுப்பதற்கான திட்டம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

மத்திய அரசு ஏன் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது ? 

►இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

►எரிவாயு உற்பத்திக்கான முதலீட்டை அதிகப்படுத்துவதற்கும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வழிவகுக்கும். 

►இதன் மூலம் எரிபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் மாற்றங்கள் ஏற்படும். 

►எரிபொருட்கள் இறக்குமதி செய்வது கணிசமாக குறையும்.


ஏன் இந்தத் திட்டத்தை இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் எதிர்க்கிறார்கள் ? 

►விளைநிலம் பாழ்நிலம் ஆகும். 

►நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் அழிந்து போகும். 

►உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். 

►செடி கொடிகள், மரம் மட்டைகள் மறைந்து போகும். 

►கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும். 

►ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் அல்லது புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

►மேலும் சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.


Related Posts:

  • பாம்பு என்றால் விஷம் – யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே… Read More
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும்&nb… Read More
  • பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்! பொதுவாகவே, மீனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளன. கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற எண்ணற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மீ… Read More
  • பிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல் பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு க… Read More
  • Power of Learning நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...நன்றி : Abdul … Read More