செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இஸ்லாமிய பெண்ணை விரட்டிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் நடந்த கொடூரம்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டிரம்ப் பிரச்சார பயணத்தின் போது பல்வேறு சர்ச்சைகளான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு நாட்டினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிபராக பதவியேற்ற சில நாட்களில் 7 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
டிரம்பின் இந்த உத்தரவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ருமானா அகமது என்ற பெண் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் வங்கதேசத்தைச் சேர்ந்த வம்சாவளி இஸ்லாமிய பெண் ஆவார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒபாமா அரசு நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
ருமானா பணியின் போது தலையில் ஹிஜாப் (பர்தா) அணிந்து இருப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது ருமானா திடீரென பணி நீக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ருமானா கூறுகையில், விசா தடை விதித்த 8 நாட்களில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.