வியாழன், 23 பிப்ரவரி, 2017

குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

ஜியர்டயாஸிஸ் என்பது ஒரு குடல் தொற்றாகும். இது ஜியார்டியா லம்ப்லியா எனப்படும் ஒட்டுண்ணி புரோட்டோசோனால் ஏற்படுவதாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால், இது செரிமான மண்டலத்தையே நாசமாக்கிவிடும்.
ஜியர்டயாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாது. ஆனால் இப்பிரச்சனையை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இக்கட்டுரையில் ஜியர்டயாஸிஸ் குடல் தொற்றில் இருந்து விடுபடுவதற்கான இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை எவ்வித பக்கவிளைவும் இல்லாத மிகவும் பாதுகாப்பான வழிகளாகும்

ஒட்டுண்ணி ஜியர்டயா லம்ப்லியா 
இந்த ஒட்டுண்ணி சிறு குடலைத் தாக்குவதோடு, கடுமையாக பாதிக்கவும் செய்யும். இது குடலினுள் கட்டிகளாக உருவாகி, உணவுகள் மற்றும் குடிநீரின் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடியது.

அறிகுறிகள் 
இந்த ஒட்டுண்ணி உடலினுள் இருந்தால், அதனால் நாள்பட்ட வயிற்றுப் போக்கு அல்லது தொடர்ச்சியான வயிற்றுப் போக்கை சந்திக்க நேரிடும். அதோடு வயிற்று உப்புசம், அடிவயிற்று வலி மற்றும் திடீர் எடை குறைவு போன்றவையும் ஏற்படும். சரி, இப்போது இந்த ஒட்டுண்ணியை அழிக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

பூண்டு
பூண்டுகளில் உள்ள மருத்துவ குணத்தால், ஒட்டுண்ணி ஜியர்டியா லம்ப்லியாவின் இயக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, அதன் தாக்கம் தடுக்கப்படும். ஆகவே வயிற்றில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால், உடனே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிடுங்கள். இதனால் எப்பேற்பட்ட ஒட்டுண்ணியும் அழிந்து வெளியேறிவிடும்.

தயிர் 
புளித்த தயிரில் ஜியர்டியா லம்ப்லியாவை எதிர்த்துப் போராடும் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் அதிகளவில் இருக்கும். ஆகவே அவ்வப்போது புளித்த தயிரை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

அதிகளவு நீர் 
ஜியர்டயாசிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகள் தென்பட்டால், குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதன் மூலமும் விரைவில் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

பீட்ரூட் ஜூஸ் 
பீட்ரூட்டில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. இதன் ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், ஜியர்டயாஸிஸ் தொற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

தேங்காய் 
தேங்காயில் லாரிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. இது வைரஸ் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் நுண் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. எனவே இந்த தேங்காய் அடிக்கடி சாப்பிடுங்கள்.