திங்கள், 27 பிப்ரவரி, 2017

திலகர் திடலில் உண்ணாவிரதம் ; ஐ.டி., இளைஞர்கள், கிராம மக்கள் குவிகிறார்கள்!!

நாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 15 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று காலை 9 மணிக்கு புதுக்கோட்டை திலகர் திடலில் ஐ.டி., இளைஞர்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார ஏராளமான கிராமமக்கள் குவிந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வலுப்பெற செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சென்னையில் ஐடி., இளைஞர்கள் ஆலோசனையும் நடத்தினர். திலகர் திடலில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் அடுத்த மாபெரும் அறப்போராட்டமாக வெடிக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
இந்த போராட்டம் வலுப்பெற்று வெற்றியை சாதிக்குமா? ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறும் அளவுக்கு போராட்டம் வெற்றியடையடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

source: maalaimalar