19 4 2022
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோது மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் அருகே அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. அப்போது, அவருடைய கான்வாய் மீது கருப்பு கொடி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்ற எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு மாநில அரசு முழு பொறுப்பேற்க வேண்டுமென அறிக்கை வெளியிட்டனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம் எழுதினார்.
இதுதொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆளுநர் கவனத்தை தங்கள்பால் ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை ரோட்டை நோக்கி வீசி எறித்தனர். அந்த கொடிகள் ஆளுநர் கான்வாய் முழுவதும் சென்ற பின்பு காவல் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது விழுந்தன என்று தெரிவித்துள்ளது.
உடனடியாகப் பாதுகாப்பிற்கு இருந்தக் காவலர்கள் கொடிகளைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களைத் கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர்.கைது செய்தவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று விளக்கியுள்ள காவல்துறை, “ காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்புகள் அமை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்” என்றும் கூறியுள்ளது.
source https://news7tamil.live/governor-rn-ravi-attacking-the-vehicle-tn-police-explain.html