ஞாயிறு, 5 மார்ச், 2023

வட இந்திய தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 வருடம் சிறை : டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

 5 3 23

DGP Sylendra babu
DGP Sylendra babu

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்திகள் பரப்பினார்ல் 7 ஆண்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த தகவல்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் போலியானவை என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும் இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பீகார் பாஜக. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த அனைத்து கட்சி குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது பீகார் அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிகக்ப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாடு அமைதியாக உள்ளது. வதந்திகளை பரப்புவது குற்றம். இதுபோன்ற வதந்திகளை பரப்பிய 2 பத்திரிக்கையாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது. இணையதளங்களிலும், சமூகவலைதளங்களில் சில விஷமிகள் வேண்டுமென்றே இது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பொய் தகவல்கள் பரப்புவோர் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும். வதந்தியை பரப்புவோர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்டும் என்று தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-dgp-sylendra-babu-warning-to-rumor-spreaders-604535/